கம்பைநல்லூர் அருகே தீப பரமேஸ்வரி ஆலயத்தில் 1000 கிடா வெட்டி 10000 பேருக்கு அன்னதானம்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      தர்மபுரி
tmp

 

கம்பைநல்லூர் அருகே மோளையனூர் சென்றாய பெருமாள் சுவாமி தீப பரமேஸ்வரி, பெரியாண்டவர் ஆகிய சுவாமிகளின் முப்பெரும் விமர்சியாக கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர்க்கு அருகே உள்ள மோளையனூர் (எ) மல்லசமுத்திர கிராமத்தில் சென்றாய பெருமாள் சுவாமி, தீபபரமேஸ்வரி, பெரியாண்டவர் ஆகிய சுவாமிகலின் முப்பெரும் விழாவையொட்டி 1000 கிடா, 500 கோழிகள் வெட்டி 10000-க்கு மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு கோயில் கவுண்டர் மாணிக்கம் தலைமை தாங்கினார். ஊர் கவுண்டர் தீர்த்தகிரி ஊராட்சி மன்றத்தலைவர் சக்திவேல் முன்னால் கவுன்சிலர் ராமசாமி, முக்கிய பிரமுகர்கள் பார்த்தீபன், முருகன், ஊராட்சி மன்றத்தலைவர் ராமஜெயம், சின்னசாமி ஒன்றிய அவைத்தலைவர் கண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தார். தீபபரமேஸ்வரி, பெரியாண்டவர், திருக்கோயில் பொறுப்பாளர்கள் மாது, கெளரவன், பசுவன், ராமசாமி, வேங்கன், மாரியப்பன், ஆறுமுகம், தீர்த்தமலை, சென்னப்பன், கிருஷ்ணன், வேணு, பெருமாள், பெரியண்ணன், கோவிந்தராஜ், சின்னதம்பி மற்றும் விழாக்குழுவினர்கள், பங்காளிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவையொட்டி, தாரை, தப்பட்டை, முழங்க வாண வேடிக்கையும், மயில் ஆடம், குயிலாட்டம், கேரளா மேளம் இசை முழங்கல் உட்பட பல்வேறுபட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


கம்பைநல்லூர் அருகே மோளையனூர் சென்றாய பெருமாள் சுவாமி தீப பரமேஸ்வரி, பெரியாண்டவர் ஆகிய சுவாமிகளின் முப்பெரும் விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத்தலைவர்கள் ராமஜெயம், சக்திவேல், சின்னசாமி, மாணிக்கம் மற்றும் பலர் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: