செங்கோட்டை நூலகத்தில் திருக்குறள் திறனாய்வுப் போட்டி

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      திருநெல்வேலி
thirukkural

செங்கோட்டை நூலக வாசகர் வட்டமும் மேலகரம் எல்.என். சேரிடபிள் ட்ரஸ்ட்-ம் இணைந்து நடத்தும் இ நூல் திறனாய்வு போட்டி நான்காவது மாதமாக செங்கோட்டை நூலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மாணவர்கள் திருக்குறள் நூலில் ஏதாவது ஒரு அதிகாரத்தில் உள்ள 10 பாடல்களை திறனாய்வு செய்து எழுத வேண்டும். இவ்விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வாசகர் வட்டச் செயலாளர் செண்பககுற்றாலம் துணைத்தலைவர் முகம்மதுமுஸ்தபா முன்னிலை வகித்தார்கள்.ஓய்வு பெற்ற ரயில்வேத் துறை ஆசிரியா அருணாச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆசிரியர் புஷ்பாசாந்தி எஸ்.ஆர்.எம். பள்ளி ஆசிரியர் பிச்சம்மாள் மற்றும சுசீலா ஆகியோர் போட்டிக்கு நடுவராக கலந்து கொண்டு பணியாற்றினார்கள். எஸ்.எஸ்.ஏ. திட்ட மேற்பார்வையாளர் ராஜேந்திரன் விழுதுகள் அறக்கட்டளை இயக்குநர் சேகாசாரல் அகாடமி இயக்குநர் ஹரி செங்கோட்டை கவிஞர் கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். போட்டிக்கு குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவிகள் கடையநல்லூர் மனோ உறுப்புக்கல்லூரி மாணவ மாணவிகள் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி மாணவிகள் ஜே.பி. கல்லூரி மாணவிகள் கொடிகுறிச்சி நல்லமணியாதவா கல்லூரி மாணவர்கள் இலத்தூர் பாரத் கல்வியியல் கல்லூரி மாணவிகள் இ மற்றும் நூலக வாசகர்கள் என மொத்தம் 100 பேர் போட்டியில் கலந்து கொண்டார்கள். நூலகர் ராமராஜ் வரவேற்றார் .நூலகர். ராமசாமி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை விஜி அனுசியா தங்கராஜ மாரியப்பன் ஆகியோர் செய்து இருந்தார்கள்.

 


 

இதை ஷேர் செய்திடுங்கள்: