நெல்லை அதிவிரைவு ரயிலுக்கு சிறந்த பராமரிப்பு விருது

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      திருநெல்வேலி

தெற்கு ரயில்வேயில் சிறந்த பராமரிப்புக்கான விருதை நெல்லை அதிவிரைவு ரயில் பெற்றுள்ளது. இதற்காக பாராட்டுச் சான்றிதழும், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் நெல்லை பராமரிப்புப் பிரிவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி-சென்னைக்கு தினமும் இயக்கப்படும் நெல்லை அதிவிரைவு ரயில், தெற்கு ரயில்வே துறைக்கு அதிக வருவாய் பெற்றுத்தரும் பிரதான ரயில்களில் ஒன்றாகும். இதில், 7 குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், 12 படுக்கை வசதி பெட்டிகள், 3 பொது பெட்டிகள், 2 ரயில்வே ஊழியர் பெட்டிகள் என மொத்தம் 24 பெட்டிகள் இடம்பெற்றுள்ளன. மதுரை கோட்டத்தின் கீழ் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகேயுள்ள பராமரிப்பு நிலையத்தில் (பிட்லைன்) நெல்லை அதிவிரைவு ரயில், பிலாஸ்பூர் விரைவு ரயில் மற்றும் சிறப்பு ரயில்கள் பராமரிக்கப்படுகின்றன.தெற்கு ரயில்வே பொறியியல் துறை சார்பில் அண்மையில் நடைபெற்ற சிறந்த ரயில் பராமரிப்புக்கான தேர்வில் மதுரை திருவனந்தபுரம், பாலக்காடு, சென்னை, சேலம், திருச்சி கோட்டங்களில் இருந்து தலா ஒரு விரைவு ரயில் போட்டியில் பங்கேற்றது. இதில் நெல்லை அதிவிரைவு ரயில் சிறந்த பராமரிப்புக்கான விருதைப் பெற்றது. இதற்காக ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசையும், பாராட்டுச் சான்றிதழையும் தட்டிச் சென்றது.பெட்டிகளில் புதுமைகள்: இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியது: நெல்லை அதிவிரைவு ரயிலில் பெட்டி எண், இருக்கை எண் குறிப்பிடுதல், தீயணைப்புக் கருவி இருப்பிடம், அவற்றை உபயோகிக்கும் முறை, பாதுகாப்பு ஜன்னல் பாதை, ரயில் பெட்டியை அதிக அழுத்தத்தில் தண்ணீர் அடித்து சுத்தப்படுத்துதல் ஆகிவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. ஒரு ரயில் பெட்டியில் 400 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 தண்ணீர் தொட்டிகள் அமைத்து பராமரிக்கப்படுகிறது. கரப்பான், எலி, மூட்டைப்பூச்சி உள்ளிட்டவற்றின் தொல்லையைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனர்.பயணிகளுக்கு அக்கறை தேவை: திருநெல்வேலி ரயில் நிலைய மேலாளர் கல்யாணி கூறியதாவது: நெல்லை அதிவிரைவு ரயிலுக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திருநெல்வேலி பராமரிப்புக் குழுவினரின் துரித பணிகள் பாராட்டுக்குரியதாகும். உணவுப் பொருள்களை பெட்டிகளுக்குள் கொட்டிவிட்டு அப்புறப்படுத்தாமல் செல்வது போன்றவற்றை கைவிட்டு, ரயில்களின் பராமரிப்பு விஷயத்தில் பயணிகளும் அக்கறை காட்ட வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்வே துறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.அந்த வகையில் மனிதக்கழிவுகள் பாக்டீரியா மூலம் மட்கிப்போகும் விதத்தில் பயோ கழிவறைகள் ரயில்களில் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் காகிதம் உள்ளிட்டவற்றை போடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், சில பயணிகள் இதைக் கடைப்பிடிப்பதில்லை. விதிமீறல்களை ரயில் பயணிகள் கைவிட்டால் பராமரிப்பு மேலும் சிறப்பாக அமையும் என்றார் அவர்.


 

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: