முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டத்தில் நடந்த முப்பெரும் விழாவில் தமிழக அரசின் பல்வேறு விருதுகள் பெற்ற 2,548 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டம், திண்டல் யு.ஆர்.சி. பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ்  தலைமையில்,  பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ,  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள்,  ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்கள்.

சேர்க்கை அதிகரிப்பு

    பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  ஆசிரியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி  தெரிவித்ததாவது,மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியோடு  தமிழ்நாடு முதலமைச்சர்  பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். அதன்பேரில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அரசுப்பள்ளிகளில்  பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தக பை, சீருடை, வண்ண பென்சில்கள், வரைகலை பெட்டி, மிதிவண்டி, மடிக்கணினி, காலணி உள்ளிட்ட அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி வகுப்பறைகள்  நல்ல சூழலில் அமைந்திருக்க வேண்டும். பள்ளிகளில் பசுமை மன்றங்கள், தேசிய பசுமைப் படைகள் போன்றவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்ச்சியில் மாநிலத்திலே முதலிடம் பெற்றுள்ளது. நடப்பாண்டிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளிலும் முதல் இடத்தை பெறுவதற்கு ஆசிரியர் பெருமக்கள் ஆகிய நீங்கள் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பான முறையில் கல்வியினை அளித்து தமிழகத்திலே கல்வியில் ஒரு புரட்சியினை ஏற்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் மாணவ, மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் கல்வியினை போதித்து கல்வியின் தரத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அதன்பேரில் தமிழ்நாட்டிலேயே ஈரோடு மாவட்டம் 100 சதவீதம் பெற்று கல்வியில் முதல் மாவட்டமாக திகழ்வதற்கு ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் அல்லும் பகலும் இடைவிடாது உழைத்திட வேண்டும். கல்வி கற்றலில் இடைநிற்றல் இல்லாமல் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து அதிக மதிப்பெண்கள் பெற்று எதிர்காலத்தில் சமுதாயத்தில் நல்ல ஒரு அங்கம் வகிப்பதற்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டுமென கேட்டு இவ்விழாவில் பரிசு பெறும் தலைமையாசிரியர் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் வாழ்த்துகின்றேன் என தெரிவித்தார்.

அமைச்சர் கருப்பணன்

  இந்நிகழ்ச்சியில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்  பேசியதாவது,

   மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  கல்விக்கு என ஆண்டுதோறும் ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்கள். எந்தத் துறைக்கும் இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவ, மாணவியர்களது கல்வித்திறன் மேம்படுத்தப்படுகிறது.        அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் அரசின் சார்பில் நான்கு செட் சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி, உலக வரைபடம், புத்தகப்பை, காலணிகள், மடிக்கணினிகள் ஆகிய அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கல்வியில் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவர்களின் பெற்றோர்களுக்கு கல்வி செலவின சுமையை ஏற்படுத்தாமல் மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  கல்வித்துறையில் பல்வேறு விலையில்லா பொருட்களை வழங்கியுள்ளார்கள். இவை அனைத்தும் பெற்றாலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆசியராகிய நீங்கள் வழங்கும் கல்வி அறிவே சிறப்பானதாக அமையும். நாளைய சமுதாயம் இளைஞர்கள் கையில், அந்த இளைஞர்களை இன்றைய ஆசியர்கள் நல்லமுறையில் கல்வி கற்பித்து சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

          இவ்விழாவில்,  பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ,  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 12 பேர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் 94 பேர், 2016-2017 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம்  தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 116 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், 100 சதவீதம்  தேர்ச்சி பெற்ற 204 சுயநிதி, மெட்ரிக் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத் தந்த அரசு நிதி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசரியர்கள் 2,548 நபர்கள் என மொத்தம்  2,974 நபர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்கள் 

   இவ்விழாவில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வகுமாரசின்னையன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வே.பொ.சிவசுப்பிரமணி, (மொடக்குறிச்சி)இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), ஈஸ்வரன் (பவானிசாகர்), மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலை தலைவர் எம்.ஜி.பழனிச்சாமி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகச்சாலை தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், வருவாய் கோட்டாட்சியர் நர்மதாதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) தே.ராம்குமார், மாவட்ட கல்வி அலுவலர் (கோபி) ரா.கலைச்செல்வின், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் த.ஆறுமுகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் இரா.ரமேஷ்,  யு.ஆர்.சி. மெட்ரிக் பள்ளி தாளாளர்  கே.சரஸ்வதி உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்