முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      கோவை

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி  பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்  தெரிவிக்கையில் “ புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டுமென்று பல்வேறு அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தை போல் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற திட்டங்கள் இல்லை. கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று (19.03.2017) கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 88வது வார்டு, அரசு அலுவலர் காலனி பகுதியில் மாநகாட்சி பொது நிதியிலிருந்து சுகாதார ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம், 88வது வார்டு, அரசு அலுவலர் காலனி பகுதியில் மாநகாட்சி பொது நிதியிலிருந்து ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

  மேலும், இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், 92வது வார்டு, பாலக்காடு பிரதான சாலை, நரசிம்மபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் வாரியப் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நரசிம்மபுரம் பகுதியில் உள்ள செங்குளம் மயானத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம், 92வது வார்டு, பி.கே.புதூர் மற்றும் சுகுனாபுரம் பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு  நிதியிலிருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், 92வது வார்டு, சுகுனாபுரம், கிருஷ்ணா நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு  நிதியிலிருந்து கட்டப்பட்ட நியாயவிலைக் கடைக்கான புதிய கட்டிடம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம், 92வது வார்டு, சுகுனாபுரம், செந்தமிழ் நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு  நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினையும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

மேலும், இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம், 92வது வார்டு, சுகுனாபுரம், செந்தமிழ் நகரில் உள்ள பகுதியில் குடிசை மற்றும் வாரியம் மூலம்                      95 பயணாளிகளுக்கும் மற்றும் தெற்கு மண்டலம், 92வது வார்டு, சுகுனாபுரம் கிழக்கு, மாரியம்மன் கோவில் அருகில் உள்ள பகுதியல் குடிசை மற்றும் வாரியம் மூலம்                200 பயணாளிகளுக்கும் வீடுகள் கட்ட உத்தரவு ஆணைகளும் வழங்கப்பட்டன.” இவ்வாறு  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்  தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் டி.என்.ஹரிஹரன்  , மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்  , மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி , மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்