Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாவட்டம் கொடிசியாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ.1313.20 கோடி மதிப்பில் நிறைவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் புதியப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      கோவை

தமிழக முதலமைச்சர் அவர்களே,  அமைச்சர் பெருமக்களே,  சட்டப்பேரவைத் தலைவர் அவர்களே. தலைமைச் செயலாளர் அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர்களே, அரசு அதிகாரிகளே, அன்பிற்குரிய பெரியோர்களே, தாய்மார்களே, உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன், இந்த இனிய விழாவில் நானும் கலந்து கொண்டு பேசுவதற்கான வாய்ப்பினைப் பெற்றமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

          தமிழக மக்களின் ஒட்டுமொத்த அன்பையும், பேராதரவையும் பெற்று வறியவர்களை வாழ்விக்கவும், வாடிக் கிடக்கம் மக்களை தேடிச் சென்று அவர்களுக்கு உதவிடவும், தமிழகத்தை இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் முன்னிலைப்படுத்திடவும், பொதுத் தேர்தலில், வரலாற்றுச்சிறப்புமிக்க பெருவெற்றியைப் பெற்று, ஆறாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று, அரசு இயந்திரத்தினை முடுக்கவிட்டு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற பேரறிஞர் பெருந்தகை  அண்ணா அவர்களின் வாய்மொழிக்கிணங்க வழிநடந்து, தலைசிறந்த அரச நிருவாகத்தை தமிழக மக்களுக்காய்த் தந்து, பார்போற்றும் நல்லாட்சி நடத்தி வந்த  இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு  முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி  தலைமையில் இந்த அரசு பதவியேற்ற நாள், அன்றே, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 5 முக்கிய அறிவிப்புகளைத் தந்தது, அனைவரசு நெஞ்கங்களிலும் நிறைந்தது.

          இன்றைக்கு, 4 மாவட்டங்களில் அலுவலக கட்டடங்கள், முக்கியத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுதல், நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தல், நலத் திட்டங்கள் வழங்குதல் என மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கும் இந்த இனிய நிகழ்ச்சியில், உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தமைக்கு எனது நன்றியை மீண்டும் தெரவித்துக்கொள்கிறேன்.

          “ மறைந்த பின்பும் ஏதாவது ஒரு அடையாளத்ததை விட்டுச் செல்லுங்கள்”

என்ற பழமொழிக்கேற்ப, தமிழக மக்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு, மதிநுட்பத்துடனும், வினைத்துpட்பதுதுடளும், தொலைநோக்குச் சிந்தனையுடனும், திடடங்களைக் கொண்டு வந்து தமிழக மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றுள்ள தாயாகத்  அம்மா  திகழ்ந்தார்கள். தமிழக மக்களின் நலன்களுக்காக கண்துஞ்சாது பாடுபட்ட, புரட்சித் தலைவி அம்மா என்னும் மிகப் பெரிய ஆளுமை படைத்த தலைவி, இன்று நம்மை விடடு மறைந்தாலும், அவர் விட்டுச்சென்ற அடையாளமான மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள்  அம்மா அவர்களின் வழியில் நடைபெறும் இந்த அரசால் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

          இந்த நேரத்தில் ஒரு நிகழ்வை நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2011 ஆம் ஆண்டு மே திங்கள் தேர்தல் வெற்றிக்குப் பிறகு,  அம்மா  முதலமைச்சராக ஆன பின்னர்,  அம்மா அவர்களைச் சந்தித்த பத்திரிகையாளர்களில் ஒருவர், “தேர்தல் அறிக்கையில் நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறீர்கள், அதிலும் குறிப்பாக கிராமப்புற மேம்பாட்டிற்காக, ஏழையெளிய மக்களின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறீர்கள், ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பு என்கிற பெரும் சுமையை சுமக்கப்போகிறீர்கள் இந்த நிலையில் இந்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றுவதற்கு உங்களுடைய உழைப்பு இன்னும் அதிகமாக தேவைப்படும் நிலையில் இந்தச்சுமையை எப்படி சுமக்கப் போகிறீர்கள் இந்த நிலையில் இந்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றுவதற்கு உங்களுடைய உழைப்பு இன்னும் அதிகமாக தேவைப்படும் நிலையில் இந்தச்சுமையை எப்படிச் சுமக்க போகிறீர்கள், இந்தக்கடமையை எப்படி, ஆற்றப்பபோகிறீர்கள் என்ற கவலை தமிழக மக்களிடையே இருக்கிறது எனக் கேட்ட கேள்விக்கு  அம்மா  முயற்சிதான் வாழ்க்கை இதை எப்படி செய்யப் போகிறோம் என்று மலைத்துப்போய் உட்கார்ந்தால் எதையுமே சாதிக்க முடியாது, எப்படியோ இப்படி ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டு விட்டது. ஆகவே இப்பொழுது தமிழ்நாடு இருக்கின்ற நிலையிலிருந்து அதைமீட்டு மீண்டும் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் மிகப்பெரிய ஒரு பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டிருக்கின்றது. மக்களுக்காக இதை ஏற்று நாம் அதை நிறைவேற்றியாக வேண்டும். என நம்பிக்கையோடு பதில் அளித்தது என் நினைவுக்கு வருகிறது. அந்த நம்பிக்கை முயற்சி,  மன உறுதிமிக்க செயல்பாடுகளால் தமிழகத்தை முன்னேற்றி புதிய சரித்திரம் படைத்திட்டார்கள்.

          மாநிலத்தில் கடுமையான வறட்சி, மழைப்பொழிவு 38 சதவிகிதம்தான், நிலத்தடி நீரின் அளவு மிகவும் குறைந்துள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தரப்பட வேண்டிய பாதுகாக்கப்பட்ட, சுத்தமான குடிநீர் குறைந்தபட்சம் கிடைக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் 900 கோடி ரூபாய் அளவிற்கு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. நம்முடைய  உள்ளாட்சித்துறை அமைச்ர்  அயாராது பாடுபட்டு உள்ளாட்சிகள் வளம்பெற உள்ளாட்சி நிர்வாகத்தில் நல்லாட்சி செய்து வருகிறார்கள். அவருக்கு புரட்சித்தலைவி அம்மா  உறுதியளித்திருந்தார்கள்.

          நீர்பாசன நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றம் குடிநீர் வழங்கல் திட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் திட்டம் ஒன்றினை 2016 – 17 ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில்  அம்மா  அறிவித்தார்கள். இத்திட்டத்திற்காக, ஆரம்பகட்டப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஓர் ஆலோசனை நிறுவனத்தை நியமித்தும் உத்தரவிட்டார்கள். இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த நான் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்ததன் அடிப்படையில் 16.03.2017 அன்று சட்டப்பேரவையில் சமர்பிக்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்திற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. என்பதையும் நான் இந்த நேரத்தில் மகிழச்சியுடன் தெரிவித்துக்கொள்வதோடு அதற்காக நம்முடைய

 முதலமைச்சர் அவர்களுக்கும் உதவி செய்த அத்தனை அதிகாரிகளுக்கும் எனது தொகுதி மக்களின் சார்பாக இந்த நேரத்தில் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

          மேலும், அவினாசி சட்டமன்ற தொகுதியில் ஒரு அரசுக் கலைக்கல்லூரியை அம்மா அவர்களிடம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் கல்லூரி அமைப்பதற்கான அனுமதி ஆணை உடனடியாக வெளியிடப்பட்டது. தொடர்ந்து நிதியொதுக்கத்திற்கான அனுமதி இந்த வார இறுதிக்குள் வெளியிடப்பட்டு கலைக்கல்லூரியை விரைவில் தொடங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயர்கல்விக்கு 3680 கோடி ரூபாயும் பள்ளிக்கல்விக்கு 27,000 கோடி ரூபாயும் இந்த ஆண்டு நிதிய ஒதுக்கப்பட்டு நம்முடைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  மிகவும் துடிப்பான, இளைஞர்கள், சிறப்பாகச் செயல்படக்கூடியவர். அவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 அம்மா  மாவட்ட கலெக்டர் மாநாட்டில் நிறைவுரை ஆற்றியபோது தமிழகத்தில் வீடற்ற குடும்பங்கள் அனைத்திற்கும் வீட்டு வசதி செய்து தர வேண்டும் என்ற குறிக்கோளை நிறைவேற்றியே தீருவேன், என சூளுரைத்தார்.  அம்மா அவர்களின் வழியில் செயல்படும் இந்த அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 8750 கோடி மதிப்பீட்டில் 2 இலட்சம் வீடுகளும், 800 கோடி ருபாய் மதிப்பீட்டில் கட்டட அறிவிப்பு செய்துள்ளது.

வளர்ச்சிப்பணிகள் என்பது. எனது தொகுதியில் மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட மாவட்டம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. நமது மாநிலத்தின் ஓட்டுமொத்த வளர்ச்சிக்கு அடிப்படை தொழிலான விவசாயம் மட்டுமல்லாமல், மீன்வளம், சுற்றுச்சூழல், மின்சார உற்பத்தி, நீர்நிலைகள் மேம்பாடு பள்ளிக் கல்வியில் புரட்சி, விளையாட்டு மேம்பாடு, நகரப்பகுதி மேம்பாடு, முதியோர்க்கு உதவித்தொகை உயர்வு என மழலையர் முதல் முதியேயர் வரை அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை தாயுள்ளத்தோடு குறிப்பால் உணர்ந்து,  கோரிக்கையை வைக்கும் முன்பாகவே பல உன்னத திட்டங்களை  அம்மா  அறிவித்து, செயல்படுத்தி வந்ததைப் போலவே  அம்மா  வழியில் செயல்படும் இந்த அரசம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி  வருவது மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடியது.

          தமிழக மக்கள் யாரிடமும் கை நீட்டி உதவிபெறும் நிலை இருக்ககூடாது என்ற தனது உன்னத இலட்சியத்தை எடுத்துக்காட்டி, அனைவரின் ஒத்துழைப்போடும், நல்லாசியோடும், தமிழக மக்களின் அன்போடும் ஆதரவோடும் அந்த இலட்சியத்தை நிறைவேற்றியே தீருவேன் என்ற உணர்ச்சி பெருக்குடன் பேரவையில்  அம்மா  சூளுரைத்தது இன்னமும் எனது செவிகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

மாநிலத்திற்க்கு ஏற்கெனவே அதிக கடன் சுமை இருந்தபோதிலும் , மைய அரசிடமிருந்து உரிய நிதி ஒதுக்கீடு கிடைக்காத சூழலிலும், “தமிழகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் எல்லாம் பெற வேண்டும், இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும், அதற்க்கான வழிதனை அரசு காண வேண்டும்”   என்பதை குறிக்கோளாக கொண்டு  அம்மா  எவ்வாறு  செயல்பட்டார்களோ அதனை அப்படியே வேத வாக்காக கொண்டு அவர்த்தம் வழியில் இந்த அரசும் செயல்படுவது மிகுந்த பாராட்டுக்குரியது.

தற்போது எங்குபார்த்தாலும் மின்சார உற்பத்திக்காண திடடங்கள் புயல் வேகத்தில் செயல்பாட்டுக்கு வந்தவண்ணம் உள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.9,878 மெகாவாட் அளவிற்க்கு மாநில மின் உற்பத்திதிறன் அதிகரித்துள்ளது . விவசாயம் மற்றும் மின்சார மானியமாக 8,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல்Nறு இனிப்பான அறிவிப்புகள் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள நதிநிலை அறிக்கையில்  அம்மா  வழியில் செயல்படும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.அவை தமிழ் குடியை தாங்கிப்பிடிக்கும் அறிவிப்புகளாக அமையும் . நம் மக்களை உலக அளவில் உயர்த்தப்போகும் அறிவிப்புகளாக நிச்சயம் அமையும்

மழைவேண்டி மகாயாகம் ஒன்று நடத்தப்பட்டபோது, மழை வரும் என்ற நம்பிக்கையுடன் ஒரு மனிதர் குடையுடன் வந்தாரம். ஆந்த மாமனிதரின் நம்பிக்கையை கண்டு, வருண பகவான், மழையைப் பொழிந்து பூமியை குளிர்வித்தார் என்று சொல்வார்கள் . தமிழ்நாட்டை புவியில் உயர்த்தியே திரூவேன் என்ற  அம்மா அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை அவர்கள  கொண்டிருந்த நம்பிக்கை,  கொண்டிருந்த இலட்சியம். அதனை அடைவதற்க்காக செயல்படுத்திய ஒவ்வொரு திட்டங்களும் இன்றைக்கும் தொடர்ந்து  இலட்சிய கனவு நனவாகிவருகிறது.

 முதலமைச்சர் திரு எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் செயல்படும் இந்த அரசு அறிவித்து செயல்படுத்தப்டும் திட்டங்களால்,  அம்மா  கண்ட கனவு நிச்சயம் நினவாகும்,  அம்மா அவர்களுக்கு செலுத்தும் நன்றி அது ஒன்றுதான் என கூறி, வாய்ப்பளித்தகைகாக நன்றிகூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் என  தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால்  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்