முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது காவல் நிலையங்களில் தகவல் தரவேண்டும் இ;ன்ஸ்பெக்டர் பேச்சு

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு -பொதுமக்கள் விடுமுறை தினங்களில் செல்லும் போது காவல் நிலையங்கள் தகவல் தரவேண்டும் ஏ.டி.எம் நம்பர்களை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்று இ;ன்ஸ்பெக்டர் மகேஸ் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் உள்ள தனியார்திருமண மண்டபத்தில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.சரவணன், ஏ.டி.எஸ்.பி சீனிவாசன் ஆகியோர் உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பட்டிவீரன்பட்டி ஆய்வாளர் மகேஸ் தலைமை வகித்தார். பட்டிவீரன்பட்டி பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் ராஜசேகரன் அனைவரையும் வரவேற்றார். ஆய்வாளர் மகேஸ் பேசும் போது பொதுமக்கள் விடுமுறை தினங்களில் செல்லும் போது காவல் நிலையங்கள் தகவல் தரவேண்டும்

ஏ.டி.எம் நம்பர்களை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது மேலும் வெளியூர் செல்லும் போது தங்கள் வீட்டில் தங்கம் மற்றும் ரொக்கப்பணங்களை வைத்து செல்லக் கூடாது . மேலும் மீறி ஏதாவது வைக்க வேண்டும் என்றால் பிரோவில் வைக்காமல் வேறு இடத்தில் வைக்ககவும். ஏனென்றால் திருடர்கள் வந்தால் உடனடியாக பிரோவை உடைப்பார்கள் வேறு இடத்தில் வைக்கவும். எக்காரணத்தைக் கொண்டு கொண்டும் ஒரு நாள் மேல் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அவசியம் காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கவும். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் இரவு பகல் நேரங்களில்  அடையாளம் தெரியாதவர்கள் எவ்வித தயக்கமின்றி காவல் நிலையத்திற்கு தெரிவிக்கவும் ஆட்டோ ஓட்டுநர்கள் போலீசாருக்கு நண்பர்களாக செயல்பட வேண்டும் என்று பேசினார் கூட்டத்தில் ஊர் பிரமுகர்கள் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள், காவல் நிலைய போலீசார்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் சார்பு ஆய்வாளர் சௌந்திரபாண்டியன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்