முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டம் , தாராபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 542 பயனாளிகளுக்கு ரூ.2.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வழங்கி

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 542 பயனாளிகளுக்கு ரூ.2.10 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட  உதவிகளை  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  வழங்கினார்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  பேசியதாவது 

மறைந்தும், மறையாமலும் மக்கள் மனதில் வாழ்ந்து வரும் மறைந்த   தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும் தமிழக அரசு, தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும்  முன்னேற்றத்திற்காக சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  தமிழகத்தில் ஏழை எளியோர் இல்லாத நிலை வேண்டும் என்பதற்காக அனைத்து துறைகளும்  சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை தனது வாழ்நாள் முழுவதுமாய் கொண்டிருந்த மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா  ஏழை எளியோர் இல்லாத நிலை இருக்க வேண்டும் என்பதற்காகவே சிறப்புமிக்க திட்டங்களை தாய் உள்ளத்தோடு வழங்கி உள்ளார்கள்.  மறைந்த  அம்மா அவர்களின் கனவுத் திட்டமான விஷன் 2023-க்குள் தமிழகத்தில் அனைவருக்கும் சிறப்பான முறையில் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும். தமிழக அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டு சிறப்புடன் இருக்க வேண்டும் என  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  பேசினார்கள். 

இன்றைய விழாவில் வருவாய்த்துறையின் சார்பில் 119 பயனாளிகளுக்கு ரூ.1,86,66,935/- மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.1,67,800/- மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 52 பயனாளிகளுக்கு ரூ.6,24,000/- மதிப்பில் முதியோர் உதவித்தொகையினையும், 61 பயனாளிகளுக்கு ரூ.3,45,950/- மதிப்பில் முதலமைச்சர்pன் உழவர் பாதுகாப்புத்திட்டம் உதவித்தொகையினையும், 40 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல்களும் மற்றும் வட்ட வழங்கல் துறையின் சார்பில் 250 பயனாளிகளுக்கு ரூ.12,50,000/-மதிப்பில் புதிய குடும்ப அட்டைகளும் என 542 பயனாளிகளுக்கு ரூ.2,10,54,685/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  வழங்கினார்கள்.

       இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, தாராபுரம் சார் கலெக்டர் கிரேஸ் பச்சாவு   சட்ட மன்ற உறுப்பினர்கள் காளிமுத்து(தாராபுரம்), உ.தனியரசு (காங்கேயம்) தனித்துணை கலெக்டர்கள், தாராபுரம் வட்டாட்சியர் கிருஷ்ணவேணி,  அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்  உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்