இந்தியாவில் பிரம்மச்சாரி முதல்வர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      இந்தியா
YogiAdityanath 2017 3 19

புதுடெல்லி  - நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிரம்மச்சாரி முதல்வர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  திரிவேந்திர சிங் ராவத் (உத்தராகண்ட்), எம்.எல்.கட்டார் (ஹரியாணா), சர்பானந்த சோனோவால் (அசாம்), நவீன் பட்நாயக் (ஒடிசா), மம்தா பானர்ஜி (மே.வங்கம்) ஆகிய முதல்வர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களது வரிசையில் புதுமுகமாக உத்தரபிரதேசத்தின் புதிய முதல்வரான யோகி ஆதித்யநாத் இணைந்துள்ளார். மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. உ.பி.யின் முன்னாள் முதல்வரான மாயாவதியும் திருமணமாகாதவர் தான். இவர்களை தவிர காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜக மூத்த தலைவர் உமா பாரதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரும் திருமணமாகாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: