அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      அரியலூர்
Ariyalur Col 2017 03 20

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தலைமையில் நடைபெற்றது.

 

வீட்டுமனை பட்டா


இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பழங்குடியினர் துணைத்திட்டத்தின் கீழ் மைய அரசின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் படி அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், மேல மைக்கேல்பட்டி கிராத்தைச் சேர்ந்த மு.உஷா, தஃபெ.முத்துராஜன் (பழங்குடியினர்) மற்றும் முதுகுளம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி, தபெ.கிருஷ்ணமூர்த்தி (பழங்குடியினர்) ஆகிய இருவரும் பெட்டிக்கடை அமைப்பதற்கு தலா ஒருவருக்கு ரூ.75,000- வீதம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகேஸ்வரி, துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) பாலாஜி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஹேமலதா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: