நாகப்பட்டினம் மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் சு.பழனிசாமி தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      நாகப்பட்டினம்
Nagai col 2017 03 20

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் நடைபெற்றது.

 

குடும்ப அட்டை

 

மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 07 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 211 என மொத்தம் 218 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு தலா ரூ.3465 வீதம் மொத்தம் ரூ.73065 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கருணாகரன், தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கோ.தேன்மொழி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எச்சரிக்கை

சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வந்தால். சிறுநீரில் புரதம் கலந்து வெளியாகிறதன் அறிகுறியாகும். காய்ச்சல், நீர்வறட்சி, உடல்நல குறைபாடு போன்றவை உண்டாகும் போது சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறி வரும். மஞ்சள் காமாலை அதிகரித்து இருப்பதை சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளிப்பட்டு காட்டிக் கொடுக்கும்.

பேரழிவை நோக்கி பூமி

பருவ நிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் போன்றவற்றால் பூமி சுனாமி, சூறாவளி மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு உட்படுமாம். படிப்படியாக இதுபோன்ற அழிவுகளால் பூமி, 2100 ம் ஆண்டிற்குள் முற்றிலும் அழிவை சந்திக்கும் என மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முதலில் கடல் இனங்கள் 95 சதவிகிதம் அழியும். இதைதொடர்ந்து, மற்ற இடங்களுக்கு பேரழிவு தொடருமாம். இதுவரை ஆர்டோவிசினியன், டெவோனியன், பெர்மியன் - ட்ராயாசிக், ஜூராஸிக், க்ரட்டாசியஸ் எனப்படும் 5 காலகட்டங்களில், உலகில் உள்ள உயிர்கள் 5 பேரழிவுகளைச் சந்தித்தது. இதற்கு இணையான ஒரு பேரழிவு வரும் 2100ம் ஆண்டுக்குள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தானியங்கி கார்

கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவு மூலம், தானாகவே இயங்கும் ரோபோ கார் அறிமுகமாகியுள்ளது. சென்சார் மூலம் இந்த காரின் சக்கரங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. செயற்கைக் கோள் மூலம் கார் செல்லும் பாதைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிக்கு 320 கி.மீ வேகத்துக்கு செல்லுமாம்.

கொட்டாவி அறியாதது

ஒருவர் அலுப்பான சூழலில் இருக்கும்போது, கொட்டாவி விட்டால், அதே மனநிலையை கொண்டவருக்கும் மூளை அனிச்சையாக செயல்பட்டு, கொட்டாவியை வரவழைக்கிறது. கொட்டாவியின் செயல், ஆக்சிஜனை உள்ளிழுக்கும். கார்பன் டை ஆக்ஸைடை வெளியில் தள்ளும். கொட்டாவி ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. கொட்டாவி வந்தால், நல்ல ஓய்வு தேவை என்று அரத்தம்.

கோடீஸ்வரர் பிச்சை

கூகுள் இணையதள நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தமிழரான சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம், 6.5 லட்சம் டாலர் (சுமார் ரூ.4 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம்). ஆனால் இழப்பீடு என்ற வகையில் இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகை கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,300 கோடி). நாள் ஒன்றிற்கு இந்திய மதிப்பில் ரூ.3.52 கோடி ஊதியமாக அவர் பெற்றுள்ளார்.

முக்தி அடைய

அசுவமேத யாகம் செய்த சூர்ய வம்சத்தை சேர்ந்த சகரன் எனும் மன்னனின் இறந்துபோன மகன்களுக்கு முக்தி அளிப்பதற்காக கங்கா தேவி பூமியில் பிறப்பெடுத்து கங்கை நதியாக ஓடுவதாக புராணம் கூறுகிறது. இதன் காரணமாகவே கங்கையில் அஸ்தியைக் கரைத்து தங்கள் முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்கின்றனர்.

நம்பர் ஒன்

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர், மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனர் பில்கேட்ஸ்.  அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரராக இவர் ஆக உள்ளார். 2௦16-ம் ஆண்டில் இவரின் சொத்து மதிப்பு 75 பில்லியன் டாலர். 2009-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பில்கேட்சின் சொத்து மதிப்பு 11% உயர்ந்து வருகிறது.

செவ்வாயில் உயிர்கள்

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரத்தை நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் கண்டறிந்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள பாறைகளில் நீரோட்டம் இருந்ததற்காக புகைப்பட சான்றுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் சமீபகாலம் வரை உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இதுதான் காரணம்

கடைகளில் நாம் சாப்பிட வாங்கும் சிக்கனுடன் கூடவே, 2 துண்டு எலுமிச்சை பழங்கள் வைக்க ஒரு முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின் - சி தேவை. அதனால் தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின் - சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட வைக்கிறார்கள்.

மறதி நகரம்

பெங்களுருவில் வாடிக்கையாளர்கள் அதிக அளவிலான பொருட்களை காரிலேயே தவறவிட்டுச் செல்வதாகவும், அதற்கடுத்த இடங்களில் டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் இருப்பதாக தேசிய அளவிலான உபெர் இண்டெக்ஸ் தகவல்கள் தெவிக்கின்றன. செல்போனுக்கு இந்த பட்டியலில் முதலிடம்.

பெயர் மாற்றம்

சில காலத்திற்கு முன் யாஹூவின் பல்வேறு தகவல்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனம் சில மாறுதல்களை கொண்டுவர முடிவு செய்துள்ளது. அதன்படி, யாஹூவின் பெயர் இனி அல்டாப்பா ஐ.என்.சி என மாற்றப்பட உள்ளதாம். மேலும் அந்த நிறுவனத்தில் தற்போது இருக்கும் செயல் தலைவராக மரிசா மேயர் நியமிக்கப்படவுள்ளார்.

புலிக்கு ஆதரவு

அமெரிக்காவில் சின் சினாட்டியில் மிருக காட்சி சாலையில்  மலேசிய புலி ஒன்றால் ஒதுக்கப்பட்ட 3 பெண் குட்டிகளை மிருக காட்சி சாலை ஊழியர் தனது வீட்டுக்கு தூக்கி சென்று வளர்த்தார். அவரது வீட்டில் உள்ள 6 வயது ஆஸ்திரேலிய ஷெப்பர்டு நாய் 3 புலிக்குட்டிகளையும் தற்போது அன்புடன் பராமரித்து வருகிறது.