திருவாரூர் மாவட்ட மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் நிர்மல் ராஜ் வழங்கினார்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      திருவாரூர்
Thiruvarur col 2017 03 20

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் நடைபெற்றது.

 

பட்டா மாறுதல்

 

இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 191 மனுக்களை அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.


பின்னர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்றவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கிட முறையே ரூ.6 ஆயிரம் , ரூ. 4 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் ஊக்க உதவி தொகையினை வழங்கி வருகின்றது. இதன்படி 2015-16 ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் தேசிய விளையாட்டுப்போட்டிகளில் பதக்கம் பெற்ற 14 விளையாட்டு வீரர்கள் , வீராங்கனைகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பிலான உதவி ஊக்கதொகைக்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கா.சக்திமணி , தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) விஜயலெட்சுமி உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: