திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 556 மனுக்கள் பெறப்பட்டது : கலெக்டர் டாக்டர் பழனிசாமி தகவல்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      திருச்சி

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 556 மனுக்கள் பெறப்பட்டது என மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, தெரிவித்துள்ளார்.

 

மாற்றுத்திறனாளிகள்

 

மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட கலெக்டர் அவர்களிடம் மனுக்களை அளித்தனர். 16 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையும், 12 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா, 3 நபர்களுக்கு விதவை உதவித்தொகையினையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.


தமிழக முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து விபத்துகளில் இறந்த 4 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மாவட்ட நலப்பணி நிதிக்குழுவிலிருந்து, தொட்டியம் வட்டம், தைலாம்பாளையத்தைச் சேர்ந்த மாணவி போதுமணி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்துவரும் அவரின் குடும்ப வறுமையின் காரணமாக மருத்துவ படிப்பினை தொடர ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையினையும், திருவானைக்கோவில், வெள்ளாளர் தெருவை சேர்ந்த வனிதா என்பவர் மாற்றுத்திறனாளிக்கான உதவி தொகைப் பெற்று வருகிறார். அவரின் ஏழ்மையின் காரணமாக ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும் நிலம் தொடர்பான 210 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 32 மனுக்களும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட மற்றும் விதவை உதவித்தொகை கோரி 77 மனுக்களும், சத்துணவு அமைப்பாளர் மற்றும் வேலைவாய்ப்பு கோரியது தொடர்பான 31 மனுக்களும், ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புகுழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரி 40 மனுக்களும், புகார் தொடர்பான 36 மனுக்களும், கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரி 7 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், சலவைப் பெட்டி தொடர்பான 6 மனுக்களும், பென்சன், நிலுவைத்தொகை கேட்டல் மற்றும் ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நலவாரியம் தொடர்பான 8 மனுக்களும் மற்றும 109 இதர மனுக்கள் என மொத்தம் 556 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: