மீஞ்சூரில் அ.தி.மு.க அலுவலகம் மற்றும் நீர்,மோர் பந்தல்களை அமைச்சர் பெஞ்சமின் திறந்தார்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      சென்னை
P neri

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க அலுவலகம் திறக்கப்பட்டது.

குளிர்பானங்கள்

அதை தொடர்ந்து கோடை காலத்தில் ஏழை,எளிய மக்களுக்கு பயனுறும் வகையில் நீர்,மோர் பந்தல் திறக்கப்பட்டன.மீஞ்சூரில் ஒன்றிய இணைச்செயலாளர் எம்.வி.சுந்தரம்,மீஞ்சூர் பேரூர் கழக இணைச் செயலாளர் எம்.வி.எஸ்.தமிழரசன் ஏற்பாட்டில் தர்பூசணிகள்,வெள்ளரிபிஞ்சுகள்,இளநீர்கள்,நீர்,மோர் உள்ளிட்ட குளிர்பானங்கள்,பழங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.இதனை மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின்,திருவள்ளுர் மேற்கு மாவட்டச் செயலாளரும்,பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏவுமான சிறுணியம் பலராமன் ஆகியோர் நீர் மோர் பந்தல்களை திறந்து வைத்து வழங்கினர்.


உடன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிரணிச்செயலாளர் பத்மஜா ஜனார்தனம்,பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை,திருவள்ளூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் பானுபிரசாத்,மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச்செயலாளர் கோளூர் கோதண்டன்,முன்னாள் மீஞ்சூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சுமித்ராகுமார்,ஒன்றிய அம்மாபேரவை தலைவர் ஆறுமுகம்,செயலாளர் திருமலை,முன்னாள் மாவட்ட அம்மா பேரவைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,ஒன்றிய மாணவரணி செயலாளர் மெரட்டூர் திருமுருகன்,முன்னாள் ஒன்றியக்கவுன்சிலர் கொண்டக்கரை அமிர்தலிங்கம்,மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகிகள் சங்கர்,சந்திரசேகரராவ்,மருத்துவர் விஜயராவ்,வழக்கறிஞர்கள் மாரி,இளையராஜா,நெய்தவாயல் சுந்தரம்,சங்கரலிங்கம்,வீரன்,மோகம்,அஸ்கர் அலி,கடப்பாக்கம் ராஜா உள்பட்ட ஏராளமான கழக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்: