முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி : கலெக்டர் பொன்னையா பார்வையிட்டார்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி திட்டம் தமிழகத்தில் காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை மற்றும் நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

அவரச சிகிச்சை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடைக்களுக்கு தேவைப்படும் அவரச சிகிச்சைக்காக இரண்டு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஏனாத்தூரில் உள்ள உழவர் பயிற்சி மைய வளாகத்திலிருந்து இயக்கப்படுகிறது. கால்நடைகளுக்கு ஏற்படும் அவசர சிகிச்சைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்-1962 இத்திட்டம் தமிழக அரசின் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.623 லட்சம் மதிப்பீட்டில் துவங்கப்பட்ட திட்டமாகும். இந்த ஊர்தி மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் மருத்துவ பிரச்சனைகளான, பசுக்களின் கன்று ஈனமுடியாத நிலை அல்லது கன்று ஈனும்போது ஏற்படும் பிரச்சினைகள், கருப்பை முறுக்கம், கருப்பை வெளித்தள்ளுதல், விபத்து, பாம்புக்கடி, மாடுகள் எழமுடியாத நிலை, வயிறு உப்புசம் போன்ற பிற அவசர சிகிச்சைகளுக்கு 1962 என்ற இலவச தொiபேசி எண்ணிற்கு அழைத்தால் மருத்துவர்கள் சிகிச்சை தேவைப்படும் இடத்திற்கு வந்து முதலுதவி செய்வார்கள் என தெரிவித்தார்.

ஊர்தியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் இப்பயன் பொதுமக்களை சென்றடையும் வகையில் இரு வெவ்வேறு மையங்களிலிருந்து இரண்டு ஊர்தியையும் செயல்படுத்த அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சௌரிராஜன், கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநர் பி.ஜெகதீசன், கால்நடை மருத்துவர் ஆர்.லதா, உழவர் பயிற்சி மையம், உதவிப் பேராசிரியர் ப.வீரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்