பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி குமரி அனந்தன் 24 நாள் நடைபயணம்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      தமிழகம்
kumari ananthan(N)

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளிக்கு நடைபயணத்தை நேற்று தொடங்கினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  காந்தி பேரவை சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நடைபயணம் மேற்கொள்ளப் போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அறிவித்திருந்தார். அதன்படி, தனது 84-வது பிறந்தநாளான நேற்று சென்னையில் இருந்து 25 பேருடன் நடைபயணத்தை தொடங்கினார். 24 நாட்கள் மேற்கொள்ளப்படும் இந்த நடைபயணம், ராஜாஜி பிறந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் முடிவடைகிறது.

குமரி அனந்தனின் நடைபயணத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார். விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன், மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சமக தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்ட பலரும் பங்கேற்று குமரிஅனந்தனுக்கு பிறந்தநாளையொட்டியும் நடைபயணம் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தனர்.

நடைபயணத்தை தொடங்கி வைத்து திருநாவுக்கரசர் பேசும்போது, ‘‘தமிழகத்தில் காங்கிரஸ் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களும் மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். குமரிஅனந்தனின் நடைபயணம் வெற்றிகரமாக அமைய காங்கிரஸ் கட்சியினர் உறுதுணையாக இருக்க வேண்டும்’’ என்றார். குமரிஅனந்தன் பேசும்போது, ‘‘1917-ல் சேலம் நகராட்சித் தலைவராக ராஜாஜி பதவி வகித்தார். அப்போது, நகராட்சி எல்லைக்குள் மதுவிலக்கை கொண்டு வந்தார். அவரது அந்த நல்ல பணியின் 100 ஆண்டுகள் நிறைவு நாளான இன்று (நேற்று) சென்னையில் இருந்து காந்தி படம் பொறித்த கொடியுடன் நடைபயணம் தொடங்கியுள்ளது. ராஜாஜி பிறந்த ஊரான தொரப்பள்ளி வரை 24 நாட்கள் நடையணம் செல்கிறோம். தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவர வேண்டும். அதற்காக தொடர்ந்து போராட தயாராக நடக்க முடியாவிட்டால் தவழுந்து சென்றாவது போராட்டம் நடத்துவேன்’’ என்றார்.


இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: