முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவாவில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

பனாஜி, கோவா மாநிலத்தில் அமைச்சர்களுக்கு இலாகாக்களை முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று ஒதுக்கீடு செய்தார். முக்கிய இலாகாக்களை பாரிக்கர் வைத்துக்கொண்டார்.

கோவா மாநிலத்தில் கூட்டணி கட்சிகளுடன் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்துள்ளது. அவரை சேர்த்து மொத்தம் 10 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். வருகின்ற 24-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

முதல்வர் மனோகர் பாரிக்கர், நிதி, உள்துறை,கல்வி ஆகிய இலாகாக்களை தன்வசம் வைத்துக்கொண்டார். இதர 9 அமைச்சர்களுக்கும் தலா ஒரு இலாகா மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளார். முன்னாள் முதல்வரும் பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவருமான பிரான்சிஸ் டி செளஷாவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை, பா.ஜ.க.வின் மற்றொரு தலைவர் பாண்டுரங் மடகாரிக்கருக்கு எரிசக்தி துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியான மகாராஷ்டிர கோமந்த் கட்சி எம்.எல்.ஏ. சுதீர் தவால்கருக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு முன்னாள் பா.ஜ. முதல்வர்  லட்சுமிகாந்த் பர்சேகர் தலைமையில் இருந்த அமைச்சரவையிலும் சுதீர்,பொதுப்பணித்துறை அமைச்சராகத்தான் இருந்தார். மகாராஷ்டிரா கோமந்த் கட்சியின் மற்றொரு தலைவர் மனோகர் ஆஸ்காங்காவுக்கு புதியதாக உருவாக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான கோவா முன்னேற்ற கட்சியின் 3 அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக்கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசாயிக்கு நகரம் மற்றும் கிராமப்புற திட்ட இலாகாவும் மற்றும் ஜெயேஷ் சல்கான்கர், வினோத் பால்யேகா ஆகியோருக்கு முறையே வீட்டு வசதி மற்றும் வருவாய் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்