முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோ எல்லைத் தடுப்புச் சுவர்: 25 பில்லியன் டாலர்கள் வரை செலவாகுமாம்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - மெக்சிகோ நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுக்கும் மெக்சிகோ எல்லைத் தடுப்புச் சுவருக்கான வடிவமைப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் தேவைகளைக் கோரியுள்ளது.அதாவது ஏறிக்கடக்க முடியாத, நுழைய முடியாத, உயரமான, பெரிய, அழகான எல்லைத் தடுப்புச் சுவருக்கான வடிவமைப்பை டிரம்ப் நிர்வாகம் கோரியுள்ளது.

மிகப்பெரிய கட்டுமானத் திட்டம்
பல மில்லியன் டாலர்கள் திட்டமான இதற்கு மிகச்சிறந்த வடிவமைப்புக்கான தேவைகளை டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுவிட்டது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய கட்டுமானத் திட்டமாக இது அமையும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ‘எளிதில் கடக்க முடியாத, ஊடுருவ முடியாத குறைந்தது 30 அடி உயரமான எல்லைத் தடுப்புச் சுவர் தேவை என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்க-மெக்சிகோ எல்லை 3,100 கிமீ நீளம் கொண்டது. அதாவது சுவரை ஏறிக்குதிக்க முடியாதவாறும் அடியில் குழி தோண்ட முடியாதவாறும் அமைய வேண்டும் என்பது டிரம்பின் விருப்பம்.

கட்டுமான சுவர் 1,600 கிமீ நீள தூரத்தை மறைத்து எழுப்பப் படும், இயற்கையான தடைகள் மீதமுள்ள பகுதிகளை ஊடுருவ முடியாதவாறு பார்த்துக் கொள்ளும் என்கிறது டிரம்ப் நிர்வாகம். சுவற்றைக் குடைந்து உள்ளே நுழைய முடிவதற்கும் கடுமையான சாதனங்களுடன் 4 மணி நேரம் தேவைப்படுமாறு இறுக்கமான கட்டுமானமாக அது அமைய வேண்டும் என்பது அதிபர் ட்ரம்பின் விருப்பம் என்று தெரிகிறது. மேலும் ‘பார்ப்பதற்கு அழகான வண்ணம்’ என்பதும் சுவருக்கு முக்கியமாக கருதப்படுகிறது. இது அமெரிக்கப் பகுதியிலிருந்து பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்பதே பிரதானம் மெக்சிகோ பகுதி பற்றி இந்த வரைவுத் திட்டத்தில் எதுவும் இல்லை என்கிறது சி.என்.என். செய்தி.

2 லட்சம் டாலர்கள் முதல் 5 லட்சம்  வரை ..
இன்னும் 2 வாரங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்திற்கு பிடிக்கும் வடிவமைப்புகளுடன் ஒப்பந்ததாரர்கள் தங்கள் வடிவமைப்புகளை அனுப்பவுள்ளனர். ஒவ்வொரு வடிவமைப்புக்குமான செலவு 2 லட்சம் டாலர்கள் முதல் 5 லட்சம் டாலர்கள் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எல்லைத் தடுப்புச் சுவரின் செலவுகளை மெக்சிகோ ஏற்க வேண்டும் என்று டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் கூறிவந்தார். ஆனால் மெக்சிகோ அதிபர் இதனை ஏற்க முடியாது என்று கூறியதும் நினைவுகூரத்தக்கது. மேலும் கட்டுமானத்திற்கு அமெரிக்க கட்டுமானப் பொருட்களையே பெரும்பாலும் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது.

25 பில்லியன் டாலர்கள் வரை செலவாகலாம்
இந்த எல்லைத் தடுப்புச் சுவர் எழுப்புவதற்கான மொத்த செலவு பற்றி வெள்ளியன்று வெளியான அரசு அறிவிக்கையில் ஏதுமில்லை என்றாலும், ஒட்டுமொத்தமாக 10 பில்லியன் டாலர்கள் முதல் 25 பில்லியன் டாலர்கள் வரை செலவாகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டிரம்பின் சமீபத்திய நிதிநிலை அறிக்கை முன்மொழிவில் சுவர் எழுப்பும் திட்டத்தைத் தொடங்க 1 பில்லியன் டாலர்கள் கோரப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago