முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபி ஆண்டவர் கல்வி நிறுவனங்களின் ஆண்டுவிழா

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      ஈரோடு

ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூயின் ஆண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்புவிருந்தினர்களாக காசிபாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன், அளுக்குளி, அரசு உயர்நிலைப்பள்ளி துணைத் தலைமையாசிரியர் அகிலாண்டம், சத்தியமங்கலம், அரசு மேல்நிலைப்பள்ளி துணை தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன், காந்தி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் சரவணன், காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் தீனதாயளன், ஆண்டவர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் கல்லூயின் நிர்வாககுழு உறுப்பினர் அனுஷர் வரவேற்றார். கல்லூரியின் தலைவர் சிராஜுதீன் தலைமை தாங்கினார். தாளாளர் கார்த்தி அரசு முன்னிலை வகித்தார். கல்லூரியின் தலைவர் சிராஜுதீன் தன் தலைமை உரையில் அன்பைச் சகோதரனாகவும், அனுபவத்தை ஆலோசகராகவும், விடாமுயற்சியை நண்பனாகவும், கவலைகள் அறியாமல், விண்ணை வட்டமிடும் பறவைகளாய், இக்கல்லூரியை சுற்றி வந்த வண்ணப் பறவைகள் நீங்கள். உங்களது ஒவ்வொரு உணர்வுகளும், இக்கல்லூரியின் வண்ண நினைவுகளாக நிறைந்து கிடக்கின்றன. உங்களது கல்வி வெறும் புத்தகப் புழுக்களாக இல்லாமல், நம் நாட்டின் வளத்தையும், உயரிய பண்பாட்டையும், காக்கின்ற வகையில் இருக்க வேண்டும்.

இனி நீங்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும், வருங்கால இந்தியாவை வடிவமைக்கக் கூடிய பணியின் முக்கிய அங்கமாகும். ஏனென்றால் இளம் தளிர்;களான உங்களை நம்பியே ஒப்படைக்கப்படுகிறது என்று கூறினார்.

காசிபாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்களது சிறப்புரையில் “மாணவர்களே கல்லூரி வாழ்க்கை என்பது காலங்கள் கடந்தாலும், நமது மனவானில் மறையாத ஓவியமாய் அமையக்கூடிய ஒன்று. உங்களது உணர்வுகள் ஒன்றுபட்டு உள்ளம் என்ற பல கற்பனைகளையும், லட்சியக் கனவுகளையும் நிறைய செய்து அதற்கு ஓர் வடிவம் கொடுங்கள்” என்று கூறினார்.

மாணவர்களே நிச்சயம் பெரும் அலைகளையும் தாண்டி எதிர் நீச்சல் போடும் வல்லமை படைத்தவர்கள் நீங்கள்” என்று கூறினார்.

சத்தியமங்கலம், நோட்டரி கிளப் வழக்கறிஞர் முபாரக் அவரது உரையில் “எவரொருவர் தாழ்மையுடனும், பணிவுடனும், ஓழுக்கத்துடனும் கல்வி கற்றுக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியாளராக முடியும்” என்று கூறினார்.

கல்லூரி முதல்வர் சுரேஷ்குமார் தனது ஆண்டு அறிக்கையில் வாரியத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் குறிப்பிட்டார். இந்த ஆண்டில் இது வரை 161 இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தமிழகத்தின் மிகச் சிறந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதை தெரிவித்தார். ஆண்டவர் ஐ.டி.ஐ முதல்வர் ஆனந்தன் அவர்கள் ஐ.டி.ஐயின் ஆண்டறிக்கையை வாசித்தார்.

வாரியத் தேர்வில் 699ஃ700 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த டிஇசிஇ துறை மாணவர் கலையரசு, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ மாணவர்களுக்கு கல்லூரியின் தலைவர் சிராஜுதீன், தாளாளர் கார்த்தி அரசு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகளை வழங்கினார்கள்.

விழாவின் இறுதியாக பாலிடெக்னிக் கல்லூரியின் எலக்ட்ரிக்கல் துறைத்தலைவர் கோவிந்தராஜன் நன்றியுரையாற்றினார்.

முன்னதாக விழாவில் ஆண்டவர் பாலிடெக்னிக் மாணவர்கள், ஆண்டவர் ஐ.டி.ஐ மாணவர்கள் மற்றும் காந்தி கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவிகளின், பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago