மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      திருப்பூர்

   திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், மக்கள் குறைதீர்க்கும்  நாள்  கூட்டம்  மாவட்ட  கலெக்டர்  ச.ஜெயந்தி,  அவர்கள் தலைமையில்  இன்று (20.03.2017) நடைபெற்றது.

           இக்கூட்டத்தில்,  பொது மக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும்  முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலைவசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழங்கப்பட்ட   270  மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட  கலெக்டர் அவர்கள்  அதன் மீது உரிய நடவடிக்கையினை,  உடனடியாக  மேற்கொள்ள  தொடர்புடையத் துறை  அலுவலர்களுக்கு  அறிவுறுத்தினார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துனை கலெக்டர் சுகவனம், தனித்துணை கலெக்டர்கள்  உள்ளிட்ட அனைத்து  அரசுத்துறைகளின் அலுவலர்கள்  பலர்  கலந்து கொண்டனர்.


இதை ஷேர் செய்திடுங்கள்: