முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சங்கர் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      நீலகிரி

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர். அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 96 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

          பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் முனைவர்.பொ.சங்கர். அவர்களிடம் அளித்த இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  மாவட்ட கலெக்டர் அவர்கள் உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் முனைவர்.பொ.சங்கர். அவர்கள் அறிவுறுத்தினார்.

          இம்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்கபணம், அகராதி, புத்தகம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் முனைவர்.பொ.சங்கர். அவர்கள் வழங்கினார்.

          அதனை தொடர்ந்து அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமில் கண்டறியப்பட்ட 68 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.1,37,994/-மதிப்பிலான 74 உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் அவர்கள் வழங்கினார்.

                இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பாஸ்கரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜூவரத்தினம், உதவி ஆணையர் (கலால்) முருகன், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்