சூரம்பட்டி டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் சோதனை

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நேரத்தில் முறைகேடாக மதுவிற்பனை நடப்பதாக அதிகாரிகளுக்கு தொடர் புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து ஈரோடு டாஸ்மாக் மேலாளர் லியாகத் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் பகல் 11.30 மணி வரை பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.ஈரோடு சூரம்பட்டி பகுதியில் அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். அதிகாரிகள் ஆய்வு நடத்த வருவது பற்றிய தகவல் அறிந்ததும் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு அருகில் மதுவிற்பனை செய்துகொண்டு இருந்தவர்கள் தப்பி சென்றனர். அங்கு சென்ற அதிகாரிகள் கடைக்கு அருகில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். முறைகேடாக மதுவிற்பனை செய்தவர்கள் யார்? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: