முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி : ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

இந்தியா டிக்ளேர்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 451 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 152 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்று முன்தினம்  4-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்திருந்தது. ரென்ஷா 7 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

ஷேன் - ஹேண்ட்ஸ்காம்ப்

நேற்று 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரென்ஷாவுடன் ஸ்மித் களம் இறங்கினார். ரென்ஷா 15 ரன்கள் எடுத்த நிலையிலும், ஸ்மித் 21 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். அப்போது ஆஸ்திரேலியா 29.1 ஓவரில் 63 ரன்கள் எடுத்திருந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு ஷேன் மார்ஷ் உடன் ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

மார்ஷ் 53 ரன்கள்

புஜாரா - சகா ஜோடி எப்படி இந்தியாவை மீட்டதோ, அதேபோல் இந்த ஜோடி ஆஸ்திரேலியாவை தோல்வியில் இருந்து மீட்டது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விளையாடிய 2-வது செசனிலும், அதன்பின் நடைபெற்ற 3-வது செசனிலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இதற்கிடையே ஒன்றிரண்டு ரன்களாக திரட்டி இருவரும் அரைசதம் அடித்தனர். இறுதியாக ஆஸ்திரேலியா 35 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தபோது மார்ஷ் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து மேக்ஸ்வெல் களம் இறங்கினார். மேக்ஸ்வெல் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்டம் டிரா

7-வது விக்கெட்டுக்கு ஹேண்ட்ஸ்காம்ப் உடன் வடே ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலியா 100 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டத்தை முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் ஒப்புக் கொண்டதால் ஆட்டம் டிராவில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். ஹேண்ட்ஸ்காம்ப் 72 ரன்னுடனும், வடே 9 ரன்னுடனும் களத்தில் இருந்தது.

சமநிலையில் தொடர் ...

இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ராஞ்சி டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளதால், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 4-வது மற்றும் கடைசி போட்டி 25-ம் தேதி தரம்சாலாவில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும். இதனால் தரம்சாலா போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக

போராடும் என்பதால் முதல் நாளில் இருந்தே போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago