முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது இரட்டை சதம் என் வாழ்நாளில் சிறந்த ஆட்டம் - புஜாரா நெகிழ்ச்சி

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி : ராஞ்சி டெஸ்ட் போட்டியில் 3-வது இரட்டை சதத்தை புஜரா அடித்தார். இது தன் வாழ்நாளில் மிகவும் சிறந்த ஆட்டமாகும் என தெரிவித்தார்.

3-வது இரட்டை சதம்

47-வது டெஸ்டில் புஜாரா 3-வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். ராஞ்சி டெஸ்டில் அவர் 202 ரன்கள் குவித்ததன் மூலம் 3-வது இரட்டை சதத்தை எடுத்தார். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 206 ரன்னும் (அகமதாபாத்), 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 204 ரன்னும் (ஐதராபாத்) எடுத்து இருந்தார்.

சிறந்த ஆட்டம்

ராஞ்சி டெஸ்டில் இரட்டை சதம் அடித்தது குறித்து புஜாரா நிருபர்களிடம் கூறியதாவது:-

நீண்ட நேரம் களத்தில் நின்று இந்த இரட்டை சதத்தை எடுத்தேன். என் வாழ்நாளில் இது மிகவும் சிறந்த ஆட்டமாகும். முரளி விஜய் என்னுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். அவர் ஆட்டம் இழந்தபோது எனக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் விருத்திமான் சகா என்னுடன் இணைந்து நன்றாக விளையாடினார். அவரது பேட்டிங் அபாரமாக இருந்தது. நாங்கள் இருவரும் திட்டமிட்டு விளையாடி ரன்களை சேர்த்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்