தோள்பட்டை காயம் குறித்து கேலி: பதிலடி கொடுத்த கேப்டன் விராட் கோலி!

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      விளையாட்டு
virat kohli 2016 11 16

ராஞ்சி : ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டின் 3-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆட்டம் இழந்த போது அவரை வெறுப்பேற்றும் விதமாக விராட் கோலி தனது தோள்பட்டையை தட்டிகாட்டியபடி மகிழ்ச்சியை கொண்டாடினார்.

மேக்ஸ்வெல் கேலி

இந்திய, ஆஸ்திரேலிய வீரர்களின் சீண்டல் ராஞ்சி டெஸ்டிலும் தொடருகிறது. 3-வது நாள் ஆட்டத்தின் போது பந்தை பவுண்டரி அருகே பாய்ந்து விழுந்து தடுத்த ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், காயமடைந்த இந்திய கேப்டன் விராட் கோலியை போன்று தன் தோள்பட்டையை பிடித்துக்கொண்டு வலிப்பது போல் நடித்து கேலி செய்தார்.


கோலி பதிலடி

இதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று முன்தினம் சுடச்சுட பதிலடி கொடுத்தார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆட்டம் இழந்த போது அவரை வெறுப்பேற்றும் விதமாக தனது தோள்பட்டையை தட்டிகாட்டியபடி மகிழ்ச்சியை கொண்டாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: