முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உசிலம்பட்டி நகராட்சியில் 47 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் அமைச்சர் சட்டசபையில் தகவல்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை   - வைகை நீரை ஆதாரமாகக் கொண்டு 47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உசிலம்பட்டி நகராட்சியில் குடிநீர் திட்டப் பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் நேற்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

 காளிகிரம்பு சாலை பணிகள்
தமிழக வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் நேற்று பேரவையில் வினா ஒன்றுக்கு பதிலளிக்கையில், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை மணலூர் கிராமத்துடன் இணைக்கும் காளிகிரம்பு சாலையை அமைக்க 21 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இப்பகுதியில் உள்ள மரங்களை அகற்ற உச்சநீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டியுள்ளதாகவும், உச்சநீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வெளியாகும் கழிவுகளிலிருந்து மின்உற்பத்தி செய்யும் செயற்குறிப்பு அரசிடம் இல்லாத நிலையில் அங்கு மின் நிலையம் அமைக்க இடம் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருவதாகவும், போதிய இடம் கிடைத்தால் மின்உற்பத்தி நிலையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்றும், உள்ளாட்சித்துறை அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

உசிலம்பட்டி நகராட்சியில் குடிநீர்

வைகை நீரை ஆதாரமாகக் கொண்டு 47 கோடி ரூபாயில் உசிலம்பட்டி நகராட்சியில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி, மற்றொரு வினாவுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்