முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் அருண்ஜெட்லியை தமிழக விவசாயிகள் சந்திப்பு : அ.தி.மு.க. எம்.பி.க்களும் சந்தித்தனர்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - டெல்லியில் நேற்று தமிழக விவசாயிகள் நிதியமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்துப் பேசினார்கள். அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு, வறட்சி நிவாரண நிதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், தமிழக விவசாயிகள் தொடர்பான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், தமிழக விவசாயிகள் சார்பில், பிரதிநிதிகள் குழுவினர், மத்திய நிதியமைச்சர்  அருண்ஜெட்லியை நேற்று சந்தித்துப் பேசினர். வறட்சி நிவாரண நிதி, காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல் போன்ற விவசாயிகள் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அப்போது வலியுறுத்தப்பட்டது. தமிழகம் வறட்சியின் பிடியில் சிக்கியிருப்பதால், அதனை சமாளிக்கும் வகையில், உரிய வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை தலைமையில், அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்