முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் தேர்தலில் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகம்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆர்.கே.நகரில் யாருக்கு ஓட்டுப்போட விரும்புகிறோமோ, அந்த வேட்பாளர் பெயருக்கு எதிரில் உள்ள பட்டனை அழுத்தும் போது அதனுடன் பொருத்தப்பட்ட கருவியில் இருந்து பிரிண்ட் செய்யப்பட்ட துண்டு சீட்டு வெளியே வரும்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் ஏதாவது ஒரு புது வசதியை தேர்தல் கமி‌ஷன் அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை தெரிந்து கொள்ளும் வசதியை தேர்தல் கமி‌ஷன் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலின் போது யாருக்கு ஓட்டுப் போட்டோம் என்பதை தெரிந்து கொள்ளும் வசதியை ஓட்டுப்பதிவு எந்திரத்தில் ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டது.

அப்போது மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியிலும், 2016 சட்டசபை தேர்தலின் போது அண்ணா நகர் தொகுதியிலும் பரீட் சார்த்தமாக அறிமுகப்படுத்தப்பட்டது.ஓட்டுப்பதிவு எந்திரத்தில் இதற்கான கருவி பொருத்தப்பட்டு இருக்கும். நாம் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் யாருக்கு ஓட்டுப்போட விரும்புகிறோமோ, அந்த வேட்பாளர் பெயருக்கு எதிரில் உள்ள பட்டனை அழுத்தும் போது அதனுடன் பொருத்தப்பட்ட கருவியில் இருந்து பிரிண்ட் செய்யப்பட்ட துண்டு சீட்டு வெளியே வரும்.அதில் நாம் யாருக்கு வாக்களித்தோமோ அவரது கட்சி சின்னம் அதில் இடம் பெற்று இருக்கும். இதன் மூலம் நமது வாக்குப்பதிவை உறுதி செய்து கொள்ளலாம். மேலும் ஓட்டுப்பதிவு எந்திரத்தைப்பற்றி புகார் கூற இயலாது. வாக்குப்பதிவு செய்தவர்களும் திருப்தியுடன் செல்லலாம்.ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 256 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்குள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago