முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவுடன் தமிழக மீனவ பிரதிநிதிகள் டெல்லியில் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - தமிழக மீனவ பிரதிநிதிகள், மத்திய வெளியுறவு அமைச்சர்  சுஷ்மா ஸ்வராஜை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினர். இலங்கை கடற்படையின் அத்துமீறல், மீனவர் படுகொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த சந்திப்பின்போது எடுத்துரைக்கப்பட்டது. அண்மையில் ராமேஸ்வரத்தில் இருந்து, கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளம் மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே தமிழக மீனவர்களை தாக்கி சிறைபிடித்தல், படகுகளை பறிமுதல் செய்தல் போன்ற அட்டூழியங்களைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த படுகொலை சம்பவம், தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு தமிழக அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்திருக்கும் சூழ்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் டெல்லியில் நேற்று  சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசினர். தமிழக மீனவர்கள் அனுபவிக்கும் சொல்லொண்ணா துயரம் குறித்து, 6 பேர் கொண்ட இக்குழுவினர், அப்போது எடுத்துரைத்தனர். தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் வகையில், இனியும் தாமதமின்றி தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்