முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் த.மா.கா போட்டியிடவில்லை : ஜி.கே.வாசன் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - ஆர்.கே. நகர் சட்டமன்றத்திற்கு நடைபெற இருக்கின்ற இடைத்தேர்தலில் த.மா.கா போட்டியிடவில்லை, யாரையும் ஆதரிக்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் வாசன் கூறியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை, ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து இயக்கத்தினுடைய மூத்த முன்னணித் தலைவர்களோடும், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட நிர்வாகிகளோடும் கலந்து பேசினோம். அதன் அடிப்படையில் ஆர்.கே. நகர் சட்டமன்றத்திற்கு நடைபெற இருக்கின்ற இடைத்தேர்தலில் தமாகா போட்டியிடவில்லை, யாரையும் ஆதரிக்கவில்லை என்ற முடிவை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

மேலும் இடைத்தேர்தல் என்றாலே பண பலத்தால் நடத்தப்படுகிறதே தவிற ஜனநாயகத்தின் அடிப்படையில் நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடைபெறுவதில்லை. எனவே நல்ல தேர்தல் நடைபெறுவதற்கு இது எடுத்துக்காட்டு அல்ல. த.மா.கா.வைப் பொறுத்த வரையிலே தொடர்ந்து மக்கள் பணி, இயக்கப் பணி ஆகியவற்றை முன்னிறுத்தியே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்கும் த.மா.கா தன்னை தயார் படுத்திக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் த.மா.கா போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்காக இந்த மாதம் தொடர்ந்து 3 வார காலத்திற்கு வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். இது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சுற்றுப்பயணம் ஆகும். ஜனநாயகத்தில் இடைத்தேர்தல்களில் கட்சிகள் போட்டியிடாமல் இருப்பது புதிதல்ல. அதன் அடிப்படையிலேயே மேற்கண்ட காரணத்திற்காக ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் த.மா.கா. போட்டியிடவில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறது'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago