முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக வனதினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் அவர்களின் முன்னிலையில், உலக வனதினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து, துவக்கி வைத்தார்.இப்பேரணியானது, கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கி, நாகர்கோவில், பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி வழியாக, மாவட்ட வன அலுவலகத்திற்கு சென்று நிறைவடைகிறது. இதில், சுமார் 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி கலந்து கொண்டனர்.பின்னர், மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டினார். மேலும், மாவட்ட வன அலுவலகத்தில் உலக வனதினத்தை குறித்து டி. புஷ்பராஜா கருத்துரைகள் வழங்கும் நிகழ்ச்சி, குறும்படங்கள் மூலம் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சுற்றுச்சூழல்களை பாதுகாப்பது குறித்து, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், வன சரக அலுவலர்கள் ராஜன்பாபு, தில்லையப்பன், சில்வஸ்டார், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்