முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்.1 முதல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பதிலாக ஸ்மார்ட் கார்டு கலெக்டர் எம்.ரவி குமார் தகவல்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      தூத்துக்குடி

ஏப்.1ம் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என கலெக்டர் எம்.ரவி குமார் தெரிவித்தார்.தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ரவிகுமார் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 4,51,796 ரேசன் கார்டுகள் உள்ளன. இதில், 14,71,053 உறுப்பினர்கள் தங்களது ஆதார் எண்ணையும், செல்போன் எண்ணையும் இணைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நூறு சதவீதம் பணிகள் நிறைவடைந்துவிட்டது. ஏப்.1ம் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்கான அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. வருகிற 27ம் தேதி முதல் 29ம் தேதிக்குள் "ஸ்மார்ட் கார்டுகள்" சம்பந்தபட்ட தாலூகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து குறிப்பிட்ட இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு ஸ்மார்ட் கார்டு விநியோகம் செய்யப்படும். இதில், தவறுகள் இருந்தால் OTP எண்கள் மூலம் திருத்தம் மேற்கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளுக்கும் இந்த மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதார்கள் மேற்கண்ட பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். தற்போது பாபநாசம் அணையும் 51 கன அடி தண்ணீர் உள்ளது. வருகிற மே 7ம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தேவையை இது பூர்த்தி செய்யும். ஆனால், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க வாய்ப்பில்லை. அனல்மின் நிலையத்திற்கு தண்ணீர் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. தாமிரபரணியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளதால், அனல்மின் நிலையத்திற்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் 4வது பைப்லைன் திட்டம் மூலம் 2நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீர் உடனுக்குடன் பயன்படுத்த வேண்டும். சேமித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. குடிநீர் தொட்டிகளை பராமரிக்க வேண்டும். இதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும். வீடுகளில் குளோரின் தெளிக்க மாநகராட்சி பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 2ஆயிரம் கிணறுகள் பழுதடைந்துள்ளது. இந்த கிணற்றில் மீன்கள் வளர்ப்பதற்கு கிருஷ்ணகிரியில் இருந்து 60ஆயிரம் மீன்கள் வாங்கப்பட்டு, ஒவ்வொரு கிணற்றிலும் 10 மீன்கள் விடப்படும். வீடுகளில் உள்ள கிணற்றில் வளர்க்கவும் மீன்கள் வழங்கப்படும். கோவில்பட்டி நகராட்சி பகுதியில வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகளில் தண்ணீர் உறிஞ்ச பயன்படுததிய மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் 1லட்சம் மக்கள் உள்ளனர். தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், 5 நாட்களுக்கு ஒருமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் உடனிருந்தார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்