முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் உணவு வணிகர்கள் உரிமம் பெற்று கடைகளை நடத்த வேண்டும் கலெக்டர் இல.சுப்பிரமணியன் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      விழுப்புரம்

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் நுகர்வோருக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு சுகாதாரமான முறையில் கிடைப்பதற்கு ஏதுவாக ஏற்படுத்தப்பட்ட சட்டமாகும். இச்சட்டத்தின்கீழ் அனைத்து அரசு மற்றும் தனியார் உணவு நிறுவனங்களும் பதிவு சான்றிதழ் அல்லது உரிமம் பெற்று இயங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கடந்த 04.02.2017 அன்று கால நீட்டிப்பு முடிவடைந்த நிலையில் அனைத்து உணவு வணிகங்களும் அவசியம் உரிமம் பதிவு பெற வேண்டியது கட்டாயமாகிறது. அவ்வாறு பதிவு அல்லது உரிமம் பெறாமல் இயங்கும் உணவு நிறுவனங்கள் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பாக இயங்குவதாக கருதப்படும்.உரிமம் பெறுபவர்கள் மாவட்ட நியமன அலுவலரிடமும், பதிவு சான்றிதழ் பெறுபவர்கள் அவரவர் பகுதியில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களிடமும் விண்ணப்பித்து உரிய சான்றிதழ் பெற வேண்டும்.உரிமம் அல்லது பதிவு சான்று பெறாமல் உணவு வணிகம் செய்தல், பாதுகாப்பற்ற தரக்குறைவான, சுகாதாரக் குறைவான உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் ஆகியன கண்டறியப்பட்டால் அக்குற்றத்தின் தன்மைக்கேற்ப தண்டனையும், அபராதமும் விதிக்க இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசுதனியார் சார்ந்த உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் கீழ் உரிமம்பதிவு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப் பிரிவு 31 மற்றும் ஒழுங்குமுறைகள் 2.1-ன்படி பெற்று நடத்தப்பட வேண்டும் என்று கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்