முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 108 ஆம்புலன்ஸ் இலவச சேவைக்கான விழிப்புணர்வு பதாகை: அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு 108 ஆம்புலன்ஸ் இலவச சேவைக்கான விழிப்புணர்வு பதாகையை (கர்ப்பிணி பெண்கள் விரும்பும் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் உட்பட‘108" ஆம்புலன்சில் பிரசவத்துக்கு இலவசமாக செல்லலாம்) மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டு தெரிவித்ததாவது கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் மாதாந்திர பரிசோதனை மேற்கொண்ட மருத்துவமனைக்கே கர்ப்பிணி பெண்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல தயாராக உள்ளனர் என்று ‘108" சேவை தொடர்பாக ‘பிரசவ காலத்தில் பனிக்குடம் உடைந்தோ அல்லது வேறு பிரச்சனைகள் காரணமாகவோ மருத்துவமனைக்கு ஆட்டோ அல்லது காரில் செல்லும் போது அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது". இதனால் சில நேரங்களில் பிரசவகால மரணம் நிகழ்ந்து விடுகிறது. அதேபோல் பெரும்பாலனவர்கள் 108 சேவை மையம் என்றாலே விபத்துகளுக்கு மட்டுமே என்று மக்கள் கருதுகிறார்கள். 108 சேவை மருத்துவம் சார்ந்த அனைத்து வகை சேவைகளுக்கும் அழைக்கலாம் என்று விழிப்புணர்வு சம்பந்தமான பதாகையை வெளியிட்டார். மருத்துவ பரிசோதனைகளுக்கு தாங்கள் விரும்பும் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை உட்பட (‘108" ஆம்புலன்சில் பிரசவத்துக்கு இலவசமாக செல்லலாம்) இலவசமாக அழைத்து செல்ல தயாராக உள்ளனர். இதுகுறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. இந்த 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயனடைய வேண்டுமென உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். காளிதாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. சண்முகசுந்தரம், மாவட்ட அதிகாரி (108 ஆம்புலன்ஸ்) இராமன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி. அரங்கநாதன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் வீரமணி, கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர் எம். பழனிசாமி உட்பட பலர் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்