முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து மின்னணு பொருட்களை எடுத்து வர அமெரிக்கா தடை

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்களை எடுத்து வர அமெரிக்கா தடை விதித்துள்ளது.

அமெரிக்க தடை
அமெரிக்காவில் நுழைய ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், சிரியா ஆகிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட விசா தடை பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இந்த நிலையில், எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப், கேமரா மற்றும் ஐ-பேடுகளை விமானத்தில் எடுத்து வருவதற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. மொபைல்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

நேற்று முதல் ...
எகிப்து, ஜோர்டான், குவைத், மொராக்கோ, கத்தார், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் போன்ற நாடுகளிலிருந்து மேற்சொன்ன பொருட்களை எடுத்து வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இத்தடை அந்நாட்டில் அமலுக்கு வருகிறது. எனினும், இதற்கான காரணம் என்னவென்பது இதுவரை வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்