முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்குள் 2000 தீவிரவாதிகள் ஊடுருவல்: வங்கதேசம் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா  - வங்கதேச நாடு சமீபத்தில் மத்திய அரசுக்கு தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக ஒரு எச்சரிக்கையை அனுப்பியுள்ளது. அதில் இந்தியாவுக்குள் சமீப நாட்களில் 2010 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எச்சரித்துள்ளது. இதையடுத்து எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

ஊடுருவல்
வங்கதேசத்தில் ஹர்சத்- உல்- ஜிதாதி அல் இஸ்லாமி, ஜமாத்- உல்- முஜாக்தீன் எனும் இரு தீவிரவாத இயக்கங்கள் செயல்படுகின்றன. இந்த இயக்கங்களை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் ஆயுதப்பயிற்சி பெற்று விட்டு, இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலை செய்கிறார்கள்.

எச்சரிக்கை
இந்த நிலையில் வங்கதேச நாடு சமீபத்தில் மத்திய அரசுக்கு தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக ஒரு எச்சரிக்கையை அனுப்பியுள்ளது. அதில் இந்தியாவுக்குள் சமீப நாட்களில் 2010 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எச்சரித்துள்ளது. இந்த தீவிரவாதிகளில் 720 பேர் வங்கதேசம் எல்லை வழியாக ஊடுருவி இருப்பதாக தெரியவந்துள்ளது. 1290 தீவிரவாதிகள் அசாம், திரிபுரா மாநிலங்கள் வழியாக ஊடுருவி இருக்கிறார்கள்.

மூன்று மடங்கு
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்து விட்டதாகவும் வங்கதேச அரசு தனது எச்சரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியா- வங்கதேச எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ள 2010 தீவிரவாதிகளை பிடிக்கவும் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago