Idhayam Matrimony

கின்னஸ் சாதனை புத்தகத்தில் ராகுல் பெயரை சேர்க்க மத்தியபிரதேச மாணவர் விண்ணப்பம்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - 27 தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் 'கின்னஸ் சாதனை புத்தகத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பெயரை சேர்க்க வேண்டும்' என்று மத்திய பிரதேச மாணவர் ஒருவர் விண்ணப்பத்தில் தெரிவித்தார்.

கின்னஸ் சாதனை
உலக அளவில் செய்யப்படும் சாதனைகள் “கின்னஸ் சாதனை” புத்தகத்தில் இடம் பெறுகிறது. அமெரிக்காவில் உள்ள கின்னஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்த சாதனை புத்தகத்தை தொகுத்து தயாரித்து வெளியிடுகிறது. கின்னஸ் சாதனை புத்தகத்தில் தங்களது சாதனையை இடம் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆய்வு செய்து, தங்கள் அதிகாரிகள் மூலம் உரிய ஆவணங்கள் பெற்று உறுதி செய்து கொண்டு, அந்த சாதனையை, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்வார்கள்.

தொடர் தோல்வி
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் விஷால் திவான் என்பவர் சமீபத்தில் கின்னஸ் நிறுவனத்துக்கு பணம் செலுத்தி விண்ணப்பம் பெற்றார். பிறகு அவர் அந்த விண்ணப்பத்தை கின்னஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தார். விண்ணப்பம் பெறப்பட்டதற்கான ஒப்புகை சான்றுகை அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பத்தில் மாணவர் விஷால், “இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் தேர்தல்களில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி 27 தடவை தொடர் தோல்வியைத் தழுவியுள்ளார். இந்த தொடர் தோல்வி சாதனைக்காக ராகுல் பெயரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பெயர் இடம்பெறுமா ?
கின்னஸ் நிறுவனம் இதற்கான விண்ணப்ப கடிதத்தை ஏற்றுக் கொண்டாலும், ராகுல் பெயரை சாதனையாளர் புத்தகத்தில் சேர்க்குமா என்று தெரியவில்லை. சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது. இதில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடியுடன் கூட்டு சேர்ந்து 105 இடங்களில் போட்டியிட்டு வெறும் 7 இடங்களில்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 403 தொகுதிகள் கொண்ட மாநிலத்தில் 7 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே காங்கிரஸ் பெற்றது மிகப்பெரும் சரிவாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்