முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமர் கோவில் பிரச்சனைக்கு பேசி தீர்வு காணவேண்டும் : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - ராமர் கோவில் பிரச்சனையை கோர்ட்டுக்கு வெளியே பேசித் தீர்க்க வேண்டும். இதில் சமரசம் செய்து வைக்க தயார் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

ராமர்கோவில் பிரச்சனை
அயோத்தி ராமர்கோவில் பிரச்சனை தொடர்பாக பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நேற்று இந்த மனு தலைமை நீதிபதி ஹேகர் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

பேச்சுவார்த்தை மூலம் ...
இந்த பிரச்சனை மிகவும் உணர்வுப்பூர்வமானது. இத்தகைய விவகாரங்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட வேண்டும். கோர்ட்டுக்கு வெளியே பேசித் தீர்க்க வேண்டும். இந்த பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்து உதவ சுப்ரீம் கோர்ட்டு தயாராக இருக்கிறது. ந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 31-ந்தேதி நடைபெற உள்ளது. அப்போது அனைத்து தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாமா? இல்லையா? என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டது.

மீண்டும் வலியுறுத்தல்
அப்போது சுப்பிரமணியசாமி குறுக்கிட்டு, “இந்த பிரச்சனையில் பலமுறை நடந்த பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் தான் முடிவடைந்துள்ளது” என்றார். தனை ஆமோதித்த சுப்ரீம் கோர்ட்டு அனைத்து தரப்பும் உட்கார்ந்து பேசி தீர்வு காண வேண்டும். சுப்ரீம் கோர்ட்டே இந்த பேச்சு வார்த்தைகளுக்கு தலைமை தாங்கும். மத்தியஸ்தரையும் தெரிவிக்கும் என்று குறிப்பிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்