முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் தாய் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் : கலெக்டர் சரவணவேல்ராஜ் நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித்துறையின் சார்பில் தாய் திட்டத்தின் மூலம் மேற்;கொள்ளப்படவுள்ள பணிகளை மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், நேற்று (21.03.2017) நேரில் ஆய்வு செய்தார்.

 

கலெக்டர் ஆய்வு

 

இவ்வாய்வின்போது, மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித்துறையின் சார்பில் தாய் திட்டத்தின் மூலம் தேளுர் ஊராட்சியில் பெரிய ஏரி, நாகமங்கலம் ஊராட்சியில் கனகராயபிள்ளை ஏரி, இடையத்தாங்குடி ஊராட்சியில் நான்கொண்டான் ஏரி ஆகிய ஏரிகள் 2016-17ஆம் ஆண்டிற்கு தாய் திட்டத்தின் மூலம் தூர் வாரவும், கரைகளை பலப்படுத்தவும் நீர் பிடிப்புப்பகுதியை ஆழப்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு பயன் பெறும் வகையில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரப்படும் என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரெட்டிபாளையம் ஊராட்சி, மயிலாண்டகோட்டை கிராமத்தில் பழுதடைந்த ஆழ்துளாய் கிணற்றினை ஆய்வு மேற்கொண்டு, குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மாற்று ஆழ்துளாய் கிணறு அமைத்திட உரிய அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், உத்தரவிட்டார்.

இவ்வாய்வின்போது, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திட்டம் லோகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் அருள்மொழி மற்றும் ஒன்றியப்பொறியாளர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்