முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக்கண்காட்சி : கலெக்டர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டம், தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்கப் சிறப்பு புகைப்படக்கண்காட்சியை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், நேற்று (21.03.2017) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

 

புகைப்பட கண்காட்சி

 

இக்கண்காட்சியில் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், வரலாற்று புகழ்பெற்ற தலைவர்களுடன் மறைந்த முதலமைச்சர் அம்மா பங்கேற்ற நிகழ்வுகளின் புகைப்படங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சி அனைத்து பொதுமக்களும் பார்த்து பயன்பெறும் விதத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

மேலும், இக்கண்காட்சியையொட்டி அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் அரசின் செய்திமலர்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து திரையிட்டு காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கண்டு பயன்பெற்றனர்.

இக்கண்காட்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சி.சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர்கள் பாலசுப்பிரமணியம் (கரூர்), சக்திவேல் (குளித்தலை), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், உதவி ஆணையர் (கலால்) சைபுதீன், ஜெயராம்ஸ் கல்வி அறக்கட்டளை தலைவர் ரா.ராமசாமி, கல்லூரி முதல்வர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்