முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் நேர் காணல் வருகிற 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது : கலெக்டர் பழனிசாமி தகவல்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மாவட்டக் கருவூலம் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து சார்நிலைக் கருவூலங்களிலும் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 2017-2018ம் ஆண்டிற்கான வருடாந்திர நேர்க்காணல் 01.04.2017 முதல் 30.06.2017 வரை நடைபெறும். இந்த நேர்க்காணலில் அனைத்து ஓய்வூதியதாரர்களும் தவறாமல் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்க்காணலில் ஆஜராகாதவர்களுக்கு ஆகஸ்ட்-2017 முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.

 

வருகிற 1ம் தேதி முதல்

 

ஓய்வூதியதாரர்கள் மத்திய அரசின் ஜீவன் பிரம்மான் மூலம் மின்னணு வாழ்வு சான்றிதழினை 01.04.2017க்கு பிறகு பெற்றளிப்பதன் மூலமும் நேர்க்காணல் பதிவு செய்யலாம்.

ஓய்வூதியதர்கள் ஜீவன் பிரம்மான் மூலம் மின்னணு வாழ்வு சான்றினை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அனைத்து வட்ட அலுவலகங்களில் இயங்கி வரும் இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையத்தில் தங்களது ஆதார் எண், ஓய்வூதியம் தொடர்பான விபரங்கள் அளித்து கைவிரல் ரேகை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இதற்காக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். 01.04.2017க்குப் பிறகு இச்சான்று பெற்றளிப்பதன் மூலம் நோக்காணலுக்கு நேரில் வருவதிலிருந்து விலக்கு பெறலாம். ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியினை பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறாhர்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்