முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      நீலகிரி

வங்கிக்கண்க்கில் ஆதார் எண்ணை சேர்ப்பதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை சேர்க்காதவர்கள் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு_

                                  சிறப்பு முகாம்

வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஆதார் மற்றும் தொலைபேசி எண்களை வரும் 31_ந் தேதிக்குள் தங்களுடைய சேமிப்பு கணக்கில் இணைக்க வேண்டும். இதுவரை இணைக்காதவர்களுக்காக நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கரின் அறிவுரையின்படி ஆதார் மற்றும் தொலைபேசி எண்களை இணைக்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

                       ஊட்டி_ கூடலூர்

அதன்படி 22_ந் தேதி ஊட்டி வட்டாரத்தில் எப்பநாடு, உல்லத்தி, கடநாடு ஊராட்சிகளுக்கு கடநாடு தொகுப்பு அலுவலகத்திலும், கக்குச்சி, கூக்கல், தூனேரி ஊராட்சிகளுக்கு கக்குச்சி தொகுப்பு அலுவலகத்திலும், இத்தலார், முள்ளிகூர், மேல்குந்தா  ஊராட்சிகளுக்கு இத்தலார் தொகுப்பு அலுவலகத்திலும், நஞ்சநாடு, பாலகொலா ஊராட்சிகளுக்கு பாலகொலா தொகுப்பு அலுவலகத்திலும், தும்மனட்டி, தொட்டபெட்டா ஊராட்சிகளுக்கு ஊட்டி தொகுப்பு அலுவலகத்திலும் நடைபெறுகிறது. 23_ந் தேதி கூடலூர் வட்டாரத்திற்குட்பட்ட ஸ்ரீமதுரை, மசினகுடி, முதுமலை ஊராட்சிகளுக்கு கூடலூர் தொகுப்பு அலுவலகத்திலும், சேரங்கோடு ஊராட்சிக்கு சேரம்பாடி மற்றும் அய்யன்கொல்லி  தொகுப்பு அலுவலகங்களிலும்,நெலாக்கோட்டை ஊராட்சிக்கு நெலாக்கோட்டை மற்றும் அம்பலமூலா தொகுப்பு அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.

             குன்னூர்_கோத்தகிரி

24_ந் தேதி குன்னூர் வட்டாரத்திற்குட்பட்ட உபதலை, பேரட்டி, எடப்பள்ளி, வண்டிச்சோலை, பர்லியார் ஆகிய ஊராட்சிகளுக்கு குன்னூர் தொகுப்பு அலுவலகத்திலும், மேலூர் ஊராட்சிக்கு தூதூர்மட்டம் தொகுப்பு அலுவலகத்திலும், கோத்தகிரி வட்டாரத்திற்குட்பட்ட ஜக்கனாரை, கொணவக்கரை, குஞ்சப்பனை ஊராட்சிகளுக்கு அவவேணு தொகுப்பு அலுவலகத்திலும், கெங்கரை, தேனாடு அரக்கோடு, கடினமாலா ஊராட்சிகளுக்கு சோலூர் மட்டும் தொகுப்பு அலுவலகத்திலும், தெங்குமரஹாடா ஊராட்சிக்கு தெங்குமரஹாடா தொகுப்பு அலுவலகத்திலும், நடுஹட்டி, கோடநாடு, நெடுகுளா ஊராட்சிகளுக்கு கோத்தகிரி தொகுப்பு அலுவலகத்திலும் நடைபெறுகிறது.

                         மீண்டும் வேண்டாம்

அந்தந்த வட்டார பொதுமக்கள் மேற்கண்ட சிறப்பு முகாமில் தவறாது கலந்து கொண்டு தங்களது ஆதார் மற்றும் தொலைபேசி எண்களை சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்கள் கண்டிப்பாக மேற்கண்ட முகாமில் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். ஏற்கனவே ஆதார் எண்களை சமர்பித்தவர்கள் மீண்டும் சமர்பிக்க வேண்டாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்