முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் பிறப்பு-இறப்புக்களை பதிவு செய்வது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      பெரம்பலூர்
Image Unavailable

பிறப்பு-இறப்புக்களை பதிவு செய்வது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கூட்ட அரங்கில் நேற்று (21.03.2017) மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு தலைமையில் நடைபெற்றது.

 

பிறப்பு- இறப்பு

 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:பொதுமக்கள் அனைவரும் தங்கள் உற்றார் உறவினர்களின் பிறப்பு மற்றும் இறப்புக்களை முறையாக பதிவு செய்துகொள்ளவது மிகவும் அவசியமானது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதன்மூலமாக பிற்காலத்தில் அவர்களுக்கு தேவைப்படும் பாஸ்போர்ட், பள்ளி சேர்க்கை மற்றும் வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவைகளை பெறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் பிறப்பு-இறப்புக்களை பதிவு செய்யும்போது ஆதார் எண்ணையும் இணைக்கவேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பதிவுகளை அந்தந்த அரசு மருத்துவமனைகளிலும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்குட்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்திலும், இதர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை கிராம நிர்வாக அலுவலகத்திலும் குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்யவேண்டும். இவ்வாறு பதிவு செய்யும்போது குழந்தைகளின் பெயர்களிலோ அல்லது அவர்களின் பெற்றோரின் பெயர்களிலோ பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறாக பெற்றோர்களின் பெயர்களில் பதிவு செய்த குழந்தைகளுக்கு ஒரு வருட காலத்திற்குள் பெயர் சூட்டி பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்திட வேண்டும். அவ்வாறு ஒரு வருட காலத்திற்குள் பதிவு செய்யாத குழந்தைகளின் பிறப்புக்களை வட்டாட்சியர் அலுவலகம் சென்று அதற்குரிய தொகையினை செலுத்தியபின் பிறப்பை பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும் இதுபோன்ற நடைமுறையை பின்பற்றி, தங்கள் உறவினர்களின் இறப்பு பதிவையும் மேற்கொள்ளலாம். மேலும், அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கும் பாகப்பிரிவினை உள்ளிட்டவைகளுக்கும், பிறப்பு-இறப்பு பதிவு செய்தல் மிகவும் இன்றியமையாதது என்பதால் அனைத்து தரப்பு மக்களும் இறப்பு-பிறப்பு பதிவுகளை எவ்வித சுனக்கம் இன்றி பதிவு செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடத்திலே ஏற்படுத்த சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் காலம் தாழ்த்தாது, விடுதலின்றி அனைவரின் பிறப்பு, இறப்பு குறித்த விபரங்களை முறையாக பதிவுசெய்திட முன்வர வேண்டும்

 

இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் (சுகாதார பணிகள்) கரோலின்பானுமதி மற்றும் வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், தமிழரசன் மற்றும்; பேரூராட்சி செயல்அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago