முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் நடைபெற்று வரும் குடிமராமத்துப்பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் பார்வையிடப்பட்டது.

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      ஈரோடு

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் நடைபெற்று வரும் குடிமராமத்துப்பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் பார்வையிடப்பட்டது.

      ஈரோடு மாவட்டம்,  பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தபாடி மற்றும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகதேவன்பாளையம், நல்லகவுண்டன்பாளையம், தடப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப்பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர்  தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டு பார்வையிடப்பட்டது.

       செய்தியாளர் பயணத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

 

   தமிழ்நாட்டில் உள்ள நீர் நிலைகளை பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைத்திடும் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி வைத்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் 13.3.2017 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மணிமங்கலம் கிராமத்தில் உள்ள மணிமங்கலம் ஏரியில் குடிமராமத்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்கள். அதன்பேரில் மாவட்டந்தோறும் நடைபெற்றுவரும் குடிமராமத்து பணிகளின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் பயணம் மேற்கொண்டு நேரில் பார்வையிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில்  உள்ள ஏரி, குளம், கால்வாய்களை பொதுமக்களின் பங்களிப்போடு மராமத்துப் பணிகள் செய்வது தான் குடிமராமத்துப்பணிகள் திட்டமாகும். இத்திட்டத்தில் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு முழுவதும் நடப்பு நிதியாண்டில் பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.100.00 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 63 பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.4.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 13.03.2017 அன்று  பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர்.கே.ஏ.செங்கோட்டையன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர்களால் தொடங்கி வைக்கப்பட்டு தற்போது பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

       கீழ்பவானித்திட்ட பகிர்மான  கால்வாய்களில்  மராமத்து பணிகள் 321.20 இலட்சங்கள்  மதிப்பீட்டிலும்  காளிங்கராயன் வாய்க்காலில் 28.00 இலட்சங்கள் மதீப்பீட்டிலும் அரக்கன்கோட்டை கால்வாயில் 12.33 இலட்சங்கள் மதிப்பீட்டிலும் தடப்பள்ளி வாய்க்காலில் 31.76 இலட்சங்கள் மதிப்பீட்டிலும்  மேட்டூர் மேற்குக்கரை கால்வாயில் 35.00 இலட்சங்கள் மதிப்பீட்டிலும்  மொத்தமாக 63 பணிகள் 428.29 இலட்சங்கள் மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டத்தில்  குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

          இப்பணிகள் மூலம் வாய்க்கால் கரைகளில் உள்ள முட்செடிகள் அகற்றப்படுதல், வாய்க்கால் தூர்வாரப்படுதல், வாய்க்காலில் உள்ள உடைந்து போன மதகுகள் புதிதாக கட்டப்படுதல், மதகுகளில் உள்ள உடைந்து போன மதகு பலகைகள் மாற்றி அமைக்கப்பட்டு புதிய திருகு மதகுகள் பொருத்தப்படுதல், வாய்க்காலின் இருபுறமும் உடைந்து போன கரைகள் மண் கொட்டி பலப்படுத்தப்படுத்துதல், தடுப்பு சுவர் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

       மேற்கண்ட பணிகளை மேற்கொள்வதால் கடைகோடி பாசன நிலங்களுக்கு தண்ணீர் குறைவின்றி கிடைக்கும்.  தண்ணீர் விரயமாவது தடுக்கப்படும். நீர் அதிக அளவில் சேமிக்கப்படும். பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பவானி திட்ட பகிர்மான கால்வாயில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணி, கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பவானி திட்ட பகிர்மான கால்வாய் யு5 மற்றும் தடப்பள்ளி கால்வாய் டி4 ஆகிய பகுதிகளில் மூன்று பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன. அனைத்து பணிகளும் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்புடனும் ஜேசிபி இயந்திரங்களை உபயோகித்தும் பணிகள் நடைபெறுகின்றன. கீழ்பவானி முறைநீர் பாசன சபை நிர்வாகிகள் மற்றும் தடப்பள்ளி  கால்வாய் பாசன சங்க நிர்வாகிகள் மேற்பார்வையிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.

       மேற்கண்ட குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 2.50 இலட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பவானி சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட  கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் மைல் 41-2-078 -ல் பிரியும் கிளைக்கால்வாயின் தலைப்பிலிருந்து மைல் 2/2 வரை உள்ள கால்வாய் மற்றும் அதன் உபகிளை வாய்க்கால்கள் ரு8யு பாசனசபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சபையின் கீழ் 3282 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளது. நடப்பு ஆண்டு 2016-17 நிதி ஆண்டில் குடிமராமத்து பணிக்காக  ரு8யு பாசனசபைக்கு ரூ.9.00 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

        ஈரோடு மாவட்டம்,  கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட  கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் மைல் 33-1-580 -ல் பிரியும் கூகலூர் கிளைக்கால்வாயின் தலைப்பிலிருந்து மைல் 3-7-438 வரை உள்ள கால்வாய் மற்றும் அதன் உபகிளை வாய்க்கால்கள் யு5 பாசனசபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சையின் கீழ் 5244 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளது. நடப்பு ஆண்டு 2016-17 நிதி ஆண்டில் குடிமராமத்து பணிக்காக   ரூ.9.00 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் மைல்   30-4-300 -ல் பிரியும் பகிர்மான கால்வாய், கிளைவாய்க்கால் மற்றும் அதன் உபகிளை வாய்க்கால்கள் ரு4 பாசனசபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சபையின்  கீழ் 4882 ஏக்கர் பாசன  நிலங்கள்  உள்ளது. நடப்பு ஆண்டு 2016-17 நிதி ஆண்டில் குடிமராமத்து பணிக்காக ரு4 பாசனசபைக்கு ரூ.8.00 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தடப்பள்ளி வாய்க்கால் மைல் 15/0 முதல் 18/0 வரை உள்ள கால்வாய் மற்றும் அதன் உபகிளை வாய்க்கால்கள் வு4 பாசனசபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சபையின் கீழ் 598 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளது. நடப்பு ஆண்டு 2016-17 நிதி ஆண்டில் குடிமராமத்து பணிக்காக வு4 பாசனசபைக்கு ரூ.1.07 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

       மேலும் குடிமராமத்து பணிகள் மூலம் முட்புதர்கள் மற்றும் சீமைக்கருவேலான் மரங்களை வேருடன் அகற்றுதல், கால்வாயில் வண்டல் மண் தேங்கியுள்ள இடங்களில் தூர்வாருதல், கால்வாயின் கரைகளில் பலவீனமாக உள்ள  இடங்களில் மண்கொட்டி அகலப்படுத்தி  கரைகளை பலப்படுத்துதல்,  பழுதடைந்த குறுக்கு  கட்டுமான கட்டிடங்கள் புதுப்பித்தல்,   கரைகள் பலவீனமாக உள்ள இடங்களில் (முக்கியமான பகுதிகளில்) தடுப்பு சுவர் அமைத்தல் ஆகியவை செயலாக்கத்திற்கு  எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளால் சீமைக்கருவேலான் மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு தூர்வாரப்படுவதால், தண்ணீர் தங்குதடையின்றியும் கரைகள் பலப்படுத்தப்படுவதால் விவசாயிகள் தங்களது வண்டி வாகனங்களில் கடைமடை வரை செல்ல இயலும்.

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள்.வி.ராஜீ (கீழ்பவானி வடிநிலகோட்டம்),.பி.திருச்செந்தில்வேலன் (பவானிசாகர் அணை கோட்டம்), உதவி செயற்பொறியாளர்கள்.எஸ்.மோகன்குமார் (பாசன உபகோட்டம், கோபி),டி.சிவக்குமார்  (கால்வாய் உபகோட்டம், கோபி),ப.பாலசுப்பிரமணியம் (கோபி),பி.ராஜசேகர் (கோபி),.எ.சிங்காரவடிவேலு (கோபி),கே.பொன்னுசாமி (கவுந்தபாடி), ஜி.ரகுபிரசாத் (சத்தியமங்கலம்), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) தே.ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago