முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் மாவட்டம் மண்டல அளவிலான பிறப்பு, இறப்பு பதிவுகள் குறித்த புத்தாக்கப் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மண்டல அளவிலான பிறப்பு, இறப்பு பதிவுகள் குறித்த புத்தாக்கப் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். இப்பயிற்சியின்போது பிறப்பு, இறப்பு பதிவுகள் தொடர்பான தகவல் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் க.சௌரிராஜன் பெற்றுக்கொண்டார். த.செந்தில்குமார், துணை இயக்குநர் சுகாதாரம் பணிகள் காஞ்சிபுரம், வி.கே.பழனி, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் செங்கல்பட்டு, ஜே.பிரபாகரன், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் திருவள்ளூர் ஆகியோர் உடனிருந்தனர்.

பதிவு

 இப்பயிற்சியின்போது பிறப்பு, இறப்பு பதிவுகள் உரிய காலத்திற்குள் உரிய அலுவலர்களிடம் பதிவு செய்ய வேண்டும். பிறப்பு , இறப்பு பதிவுகளை தகவல் கொடுப்பவர் அதற்கென உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து பதிய வேண்டும். பிறப்பு, இறப்பு பதிவுகள் மேற்கொள்ளும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், பின்பற்ற வேண்டிய சட்ட விதிமுறைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. மேலும் பிறப்பு இறப்பு சட்ட திட்டங்கள் தொடர்பாக தற்சமயம் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் மற்றும் சட்ட நுணுக்கங்களையும் விளக்கி கூறும் வகையில் நடைபெறும் இப்பயிற்சி 3 நாட்கள் நடைபெறுகிறது.

இப்பயிற்சியின் முதல்நாளில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் உதவி ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், இணை இயக்குநர் (நலப்பணிகள்) வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் உட்பட 80 அலுவலர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். இப்பயிற்சி என்.ஈசுவரன், இணை இயக்குநர் (மா.சு.பு.மையம்) பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்து துறை, சென்னை தலைமையில் மற்றும் சி.இராதாகிருஷ்ணன் ஆலோசகர் (பிறப்பு, இறப்பு பதிவு பணிகள்) மற்றும் எல்.லிங்கன் ஞானதாஸ், துணை இயக்குநர் மற்றும் வி.கே.சுதா, உதவி இயக்குநர் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம், சென்னை அவர்களால் கொடுக்கப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்