முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிநீர் தேவைக்காக கிணறு தோண்டும் பணி திண்டுக்கல் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜேந்திருன் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

  வத்தலக்குண்டு -திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள அய்யம்பாளையம்,பட்டிவீரன்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களின் குடிதண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மருதாநதி அணைப்பகுதிகளிலிருந்து கிணறுகள் மூலமாக தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகின்றது. இந்த தண்ணீரும் போதுமானதாக இல்லாததால் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணிநடைபெற்று வருகின்றது. பொதுவாகவே நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டதால் ஆழ்குழாய் கிணறுகளில் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் அய்யம்பாளையம் மருதாநதி அணையை ஒட்டிய பகுதிகளில் பொதுப்பணித்துறையினரின் அனுமதி பெற்று அய்யம்பாளையம் பேரூராட்சியின் குடிதண்ணீர் தேவையை சமாளிப்பதற்காக மாநில பேரிடர் நிவாரண மேலாண்மை நிதியின் கீழ் 10 லட்சம் செலவில் கிணறு அமைக்கும் பணிநடைபெற்று வருகின்றது. இப்பணியினை திண்டுக்கல் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜேந்திரன் இப்பகுதியில் நேரில் ஆய்வு பணியினை மேற்கொண்டார்.
 அப்போது அய்யம்பாளையம் பேரூராட்சி செயல்அலுவலர் சரவணகுமார், பட்டிவீரன்பட்டி பேரூராட்சி செயல்அலுவலர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இதுகுறத்து மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது, தற்போது மாவட்டம் முழுவதும் தண்ணீருக்கு பற்றாக்குறை நிலவி வருவதால் மற்ற வழக்கமான பணிகள் தவிர்த்து குடிதண்ணீர் தேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் நடைபெற்று வருகின்றது.
          நீர்மட்டம் கீழே சென்று விட்டதால் அதிக ஆழத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தாலும் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் கிணறுகள் தோண்டி வருகின்றோம். இதில் எதிர்பார்த்தை விட தண்ணீர் கிடைத்து வருகின்றது. பட்டிவீரன்பட்டி பேரூராட்சிக்கும் மாநில பேரிடர் நிவாரண மேலாண்மை நிதியின் கீழ் கிணறு தோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago