முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்ட த்தில், தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு மற்றும் உரிமைகள் வழங்கிட உணர்வூட்டும் பயிற்சியினை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி தொடங்கி வைத்தார்.

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      திருப்பூர்

திருப்பூர்  மாவட்டத்தில், தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு மற்றும் உரிமைகள் வழங்கிட உணர்வூட்டும் பயிற்சியினை மாவட்ட கலெக்டர்   ச.ஜெயந்தி   குத்துவிளங்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது

                      திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்புத்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. மேலும் மாவட்டத்தில்  உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு மற்றும் உரிமைகள் வழங்கிட பாகுபாடு களைவதை உறுதி செய்யும் வகையில் உணர்வூட்டும் பயிற்சி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த உணர்வூட்டும் பயிற்சியின் முக்கிய நோக்கமே மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கோடு இப்பயிற்சி நடத்தப்படுகிறது. நமது மாவட்டத்தை பொருத்த வரையில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நகரமாகும். தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து பணிபுரிகின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்ற பாதையில் செல்ல நம் மாவட்டம் பெறும் பங்காற்றுகின்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கும் தங்களின் நிறுவனங்களில் பணியினை வழங்கி  வாழ்வில் முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்கள்

    மாற்றுத்திறனாளிகளின் தகுதி அடிப்படையில் அவர்களுக்கு உண்டான வாய்ப்புகள் மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் தங்கள் நிறுவனத்திலேயே தொடர்ந்து பணிபுரிவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு பயிற்சி நிறுவனம் அமைத்து மாற்றுத்தினாளிகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து பயிற்சி நிறைவுற்ற பின் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரமும் மற்றும் அவர்களின் குடும்பத்தினையும் சிறப்பான முறையில் வழிநடத்தி சென்றிட ஏதுவாக இருக்கும் என மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்கள்.

                  முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்த தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளையும் மாவட்ட கலெக்டர்  வழங்கினார்கள்.

              இந்நிகழ்வின்போது, உதவி இயக்குநர் மாற்றுத்திறனாளிகள் நலம்  முனைவர்.

சி.மணிமாறன், திருப்பூர் சார் கலெக்டர் ஷ்ரவன்குமார்  திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம். சண்முகம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.சுந்தரமூர்த்தி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள்  நல அலுவலர் ஜெகதீசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காளிமுத்து, சேஷயர் ஹோம்ஸ்  தலைவர் ரவிசெல்வம் மற்றும் திருப்பூர் தனியார் நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago