முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட தெற்குதெரு ஊராட்சியில் கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை - மதுரை மாவட்டம், மேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட தெற்குதெரு ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்   ஆய்வு மேற்கொண்டார்.
 தெற்குதெரு ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள இருப்பு கோப்;புகளையும், நியாய விலைக்கடையில் உள்ள பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்  அங்குள்ள பொது மக்களிடம் நியாய விலைக்கடையில் பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அக்கிராமத்தில் தண்ணீர் தட்டு;ப்பாடு உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து தெற்குதெரு கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்பு, செடிகளைகளையும், அகற்றிட வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டடார். அதே பகுதியில் உள்ள கடைகளில் இருந்து ரோட்டில் போடப்பட்டுள்ள குப்பைகளை அகற்றிடவும், கடைகளில் குப்பை தொட்டி வைப்பதன் அவசியம் குறித்து வியாபாரிகளிடம் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து தெற்குதெரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து, பிரசவ வார்டில் உள்ள அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தினை பார்வையிட்டு அங்கிருந்த கர்ப்பினி பெண்களிடம் அவர்களுக்கு சரியான முறையில் மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என்ற விபரத்தினை கேட்டறிந்தார்.
 
மேலும், ஊராட்சி செயலர் மக்களிடம் நேரடியாகச் சென்று தினந்தோறும் தண்ணீர் விநியோகம் எவ்வாறு உள்ளது என்பதைக் கேட்டறிந்திடவும், குறைகள் ஏதுமிருப்பின் 24 மணிநேரத்திற்குள் சரிசெய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் விநியோக மோட்டார்கள் ஏதும் பழுதடைந்திருப்பின் அதிகபட்சம் 3 நாட்களுக்குள் அல்லது 24 மணிநேரத்திற்குள் சரிசெய்திட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

  இந்த ஆய்வின் போது திரு.பெனிடிக் தர்மராய் வருவாய் கோட்டாட்சியர்(மேலுர்), திருமதி.தமிழ்செல்வி வட்டாட்சியர்(மேலுர்), மேலுர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்