முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போட்டியிட வீரர் இல்லாததால் விஜேந்தர் சிங்கின் அடுத்த போட்டி தள்ளிவைப்பு

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்தியாவின் விஜேந்தர் சிங் தொழில்முறை குத்துச் சண்டை போட்டியில் வரிசையாக வெற்றி பெற்று வருகிறார். தற்போது எதிர்த்து போட்டியிட வீரர் இல்லாததால் அடுத்த ஆட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆசியா பசிபிக் சாம்பியன்

இந்திய அணியின் முன்னணி குத்துச் சண்டை வீரராக திகழ்ந்தவர் விரேந்தர் சிங். இவர் திடீரென தொழில்முறை குத்துச்சண்டைக்கு மாறினார். அதில் இருந்து இதுவரை 8 போட்டிகளில் கலந்து கொண்டு அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார். மேலும் டபிள்யூ.பி.ஓ. ஆசியா பசிபிக் சாம்பியன் பட்டத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

போட்டி தள்ளிவைப்பு

ஏப்ரல் 1-ம் தேதி சீனாவின் ‘டபிள்யூ.பி.ஓ. ஓரியண்டல் சாம்பியன்’ ஷல்பிகார் மைமைடியாலி என்ற வீரருடன் மோதுவதாக இருந்தது. ஆனால் ஷல்பிகார் மைமைடியாலி திடீரென விஜேந்தர் சிங்கிற்கு எதிரான போட்டியில் இருந்து பின்வாங்கினார். தான் போட்டியில் இருந்து விலகுவதற்கு அவர் எந்தவொரு காரணமும் சொல்லவில்லை. இதனால் இந்த போட்டி மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள், விஜேந்தருடன் மோதும் புதிய போட்டியாளரை முடிவு செய்ய வேண்டும்.

அவருக்கு சரியான போட்டியாளர் இல்லாததால் இந்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி மும்பையில் நடைபெறும் என விஜேந்தர் சிங்கை ஒப்பந்தம் செய்துள்ள ஐஓஎஸ் பாக்சிங் புரோமோசன் நிறுவன நிர்வாக இயக்குனர் நீரவ் தோமர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்