முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேசத்தில் அரசு சாரா ஆலோசகர்களை நீக்க முதல்வர் ஆதித்யா அதிரடி உத்தரவு

புதன்கிழமை, 22 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ  - உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி அரசு மாநகராட்சிகள், அரசு துறைகள் மற்றும் முக்கிய குழுக்களில் கட்சி தொண்டர்கள், பிரபல மானவர்கள் என 80 பேருக்கு மேற்பட்டோரை ஆலோசகர்களாகவும், தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களாகவும் நியமித் திருந்தது. இவர்கள் அனைவரும் மாநில அமைச்சருக்கு உண்டான அனைத்து சலுகைகளையும் பெற்றிருந்தனர். இந்நிலையில் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற பாஜக தலைவர் யோகி ஆதித்யநாத் அரசு துறைகளில் சேர்க்கப்பட்டிருந்த அவர்கள் அனைவரையும் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கும்படி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாநில தலைமை செயலாளர் ராகுல் பட்நாகர் அனைத்து அரசு துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். அதில், ‘‘அனைத்து முதன்மை செய லாளர்கள், செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்